பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக அல்லாத அரசு- தேவகவுடா, குமராசாமியுடன் சந்திரபாபு நாயுடு தீவிர ஆலோசனை

Google Oneindia Tamil News

பெங்களூரு: பாஜக அல்லாத மத்திய அரசை உருவாக்குவது தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்து ஆந்திரா முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

மத்தியில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் அரசை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு படுதீவிரமாக இறங்கியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் நாயுடு.

Chandrababu Naidu Meets Deve Gowda, Kumaraswamy For Post-Poll Alliance

பின்னர் கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திலும் நாயுடு பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரு வந்த நாயுடு, தேவகவுடா, குமாரசாமி ஆகியோரை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது பாஜக அல்லாத அரசு அமைய மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும் என நாயுடு வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க! எதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க!

லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Andhra Chief Minister Chandrababu Naidu met Former Prime Miniser Deve Gowda and Karnata Chief Miniser Kumaraswamy for the post-poll alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X