பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரிலிருந்து நிலவிற்கு இணைப்பு.. விக்ரம் லேண்டரை எப்படி தொடர்பு கொள்வது.. இதுதான் இனி நடக்கும்!

சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதை தொடர்பு கொள்ள நிறைய முக்கிய வழிகள் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு

    பெங்களூர்: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அதை தொடர்பு கொள்ள நிறைய முக்கிய வழிகள் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்துள்ளது. நேற்று அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆம் நிலவிற்கு மேல் சுற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இந்த விக்ரமை மேலே இருந்து படம் பிடித்து, கண்டுபிடித்துள்ளது.

    எங்கு சென்றது

    எங்கு சென்றது

    விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி இறங்கி இருக்கிறது. நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகவும், விக்ரம் லேண்டர் சென்ற கடைசி நேர வேகம் காரணமாகவும் நிலவில் கண்டிப்பாக விக்ரம் லேண்டர் சாப்ட் லேண்டிங் செய்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ கூறுகிறது.

    விக்ரம் லேண்டர்

    விக்ரம் லேண்டர்

    அதாவது விக்ரம் லேண்டர் நிலவில் மோதி இருக்காது. ஒரு பாராசூட் கட்டிய விமானி போல நிலவில் மிக மிக மெதுவாக அமைதியாக லேண்டர் இறங்கி இருக்க வாய்ப்புள்ளது. இதன் அர்த்தம் விக்ரம் லேண்டருக்கு எந்த விதமான சேதாரமும் ஏற்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    அதன்படி விக்ரம் லேண்டர் செங்குத்தான நிலையில் விழுந்திருந்தால், ஆய்வுகளை தொடர வாய்ப்புள்ளது. அதேசமயம் விக்ரம் லேண்டர் கிடைமட்டமாக விழுந்து இருந்தால் ஆய்வுகளை தொடர முடியாது. அது விக்ரம் லேண்டரை சேதப்படுத்தி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

    இனிமேல் என்ன

    இனிமேல் என்ன

    இனி விக்ரம் லேண்டர் உடன் பின்வரும் விஷயங்களை செய்ய இஸ்ரோ முயலும். அதன்படி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு கட்டளைகள் அனுப்பப்படும். அதற்கு பதில் கிடைக்கிறதா என்று சோதிக்கப்படும். அதற்கு பதில் இல்லை என்றால் விக்ரமில் இருக்கும் அவசர கால மாற்று கருவிகளை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்படும்.

    ஆர்பிட்டர்

    ஆர்பிட்டர்

    அதுவும் வேலை செய்யவில்லை என்றால் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டருக்கு கட்டளைகள் அனுப்பப்பட்டு, அந்த கட்டளைகளுக்கு விக்ரம் லேண்டர் பதில் அளிக்கிறதா என்று சோதிக்கப்படும். இதற்கும் விக்ரம் லேண்டர் பதில் அளிக்கவில்லை என்றால், அதற்கு உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவர் உடன் தொடர்ப்பை ஏற்படுத்த முயல்வார்கள்.

    கடைசி வாய்ப்பு

    கடைசி வாய்ப்பு

    பிரக்யான் ரோவர் சேதம் அடையாமல் இருக்கவே அதைக் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதனுடன் தொடர்பு ஏற்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ள முயற்சி செய்வார்கள்.

    English summary
    Chandrayaan 2: How will ISRO make contact from Bangalore to Moon? - Here is the interesting fact.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X