பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளையுடன் விக்ரம் லேண்டர் ஆயுள் முடிவு.. இஸ்ரோ அளித்த புதிய விளக்கம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது என்றும், விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை அனுப்பி வைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை விக்ரம் லேண்டர் இழந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர்.

Chandrayaan 2 Orbiter continues to perform scheduled science experiments to complete satisfaction: isro

இதனிடையே இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி விக்ரம் லேண்டரை தொடர்பு தனது விண்கலம் (2009ல் ஏவியது) மூலம் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் நாசாவாலும் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க இயலவில்லை. நாளையுடன் விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் நிறைவடையும் நிலையில் அதனை தொடர்பு கொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிகளை தரவில்லை.

நாளை முதல் நிலவின் தென் பகுதியில் 14 நாள்கள் புவி இரவுகளால் இருள் ஏற்பட துவங்க உள்ளது. அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக காணப்படும். இத்தகைய அதீத குளிர் வெப்பநிலையில் எலக்ட்ரானிக் பொருட்களான லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியன பாதிக்கப்படும். விக்ரமின் இயந்திர பாகங்கள் சேதமடைந்து, அதன் சோலார் திறன் இழக்கும். எனவே விக்ரம் லேண்டரின் ஆயுள் நாளையுடன் நிறைவு பெறுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தேனி மருத்துவக் கல்லூரியின் சென்ணை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன்தேனி மருத்துவக் கல்லூரியின் சென்ணை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன்

வியாழக்கிழமை மாலை இஸ்ரோ நிறுவனம் விக்ரம் லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது என்றும், விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

English summary
isro on twitter: Chandrayaan 2 Orbiter continues to perform scheduled science experiments to complete satisfaction. Meanwhile, the National committee of academicians and ISRO experts is analysing the cause of communication loss with Vikram Lander
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X