பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ

Google Oneindia Tamil News

Recommended Video

    லேண்டர் இயங்காவிட்டால் வேற வழி இருக்கு... விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்

    பெங்களூர்: சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் நிலை குறித்து இஸ்ரோவை சேர்ந்த குழு அறிக்கையை வெளியிடப் போவதாக தகவல்கள் எழுந்துள்ளன.

    சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது. நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

    இதற்காக கடந்த 7-ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் மெதுவாக தரையிறங்கும்படி புரோகிராம் செய்யப்பட்ட நிலையில் லேண்டரோ வேகமாக தரையிறங்கியுள்ளது.

    வானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிவானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

    ஆர்பிட்டர் படம்

    ஆர்பிட்டர் படம்

    அதிலும் சாய்தளமாக இறங்கிய லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் உயரத்தில் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் லேண்டர் இருக்குமிடம் குறித்து ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

    அறிக்கை

    அறிக்கை

    இன்னும் இரு நாட்களில் நிலவில் சூரிய ஒளி 14 நாட்களுக்கு மறைந்து கடும் குளிர் நிலவும் என்பதால் சூரிய வெளிச்சத்திலேயே அதை கண்டுபிடிக்க இஸ்ரோவும் நாசாவும் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோவில் குழு விக்ரம் லேண்டர் தொடர்பான அறிக்கையை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

    இஸ்ரோ

    இஸ்ரோ

    அதாவது விக்ரம் லேண்டர் மென்மையாக தரையிறங்குவதில் தோல்வியை சந்தித்துள்ளது, இது வரை லேண்டர் குறித்த கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்து வெகு விரைவில் அறிக்கையாக வெளியிடுகிறது இஸ்ரோ.

    இணையதளம்

    இணையதளம்

    இது தொடர்பாக குழு உறுப்பினர்கள் ஏற்கெனவே சந்தித்து ஆலோசனை செய்து முடிவுகளை இறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இஸ்ரோ அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் குறித்த எந்தவித புதிய தகவலும் இல்லை. ஏதாவது இருந்தால் இஸ்ரோ இணையதளத்தில் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளது.

    English summary
    Chandrayaan-2: What happened to Vikram lander? The ISRO panel has to release the report about its findings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X