பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வலுவான கால்கள்.. கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறன் கொண்ட லேண்டர்.. இதுதான் சந்திரயான் 3- இஸ்ரோ

Google Oneindia Tamil News

Recommended Video

    அசத்தல் திட்டங்களுடன் தயாராக இருக்கும் சந்திரயான் 3| Chandrayaan 3 is to be launched by next year

    பெங்களூர்: அடுத்த ஆண்டில் சந்திரயான் 3 வடிவமைக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த நிலையில் செப்டம்பர் 5-ஆம் தேதி நிலவில் லேண்டர் மெதுவாக தரையிறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இஸ்ரோவுடனான தொடர்பை லேண்டர் துண்டித்து கொண்டது.

    இதனால் அதன் நிலை தெரியாமல் விஞ்ஞானிகள் சோகமடைந்தனர். இதையடுத்து நிலவை சுற்றி வந்த ஆர்பிட்டர், நிலவில் சாய்வாக விழுந்திருந்த லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்பியது. இதனால் மெதுவாக தரையிறங்குதலுக்கு பதிலாக வேகமாக லேண்டர் தரையிறங்கியது தெரியவந்தது.

    வாவ்.. அழகோ அழகு!.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்?.. அட்டகாசமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்!வாவ்.. அழகோ அழகு!.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்?.. அட்டகாசமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்!

    இஸ்ரோ

    இஸ்ரோ

    இதையடுத்து லேண்டருடனான சிக்னலை பெற நாசாவுடன் இணைந்து இஸ்ரோ முயற்சித்தது. ஆனால் அது முடியவில்லை. இதையடுத்து சந்திரயான் 3 திட்டத்தை வடிவமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது.

     தயாரிக்கப்படும்

    தயாரிக்கப்படும்

    இதுகுறித்து இஸ்ரோ கூறுகையில், சந்திரயான் 3 குறித்து திட்ட அறிக்கை தயார் செய்ய உயர் மட்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் தலைமையில் தயாரிக்கப்படும்.

    கவனத்தில்

    கவனத்தில்

    அடுத்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான் 3 திட்டத்தை உருவாக்குவதற்கான வழிமுறைககளை அந்த கமிட்டி வழங்கிவிடும். இந்த முறை ரோவர், லேண்டர் மற்றும் தரையிறங்கும் இயக்கங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.

     தரையிறங்குவதில் தாமதம்

    தரையிறங்குவதில் தாமதம்

    சந்திரயான் 2 வில் இருந்த தவறுகள் இந்த முறை திருத்திக் கொள்ளப்படும். பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல் வெற்ற பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த திட்டம் அடுத்த நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும். சந்திரயான் 3-க்கிற்காக உருவாக்கப்படும் லேண்டரின் கால்கள் வலுவுடையதாகவும் எந்த சூழல் ஏற்பட்டாலும் தரையிறங்கும் போது திறனுடன் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    English summary
    Chandrayaan 3 is to be launched by next year November. Deficiencies in Chandrayaan 2 will be corrected, says scientists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X