பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனவு நினைவாகிறது... செப்டம்பர் 6-ம் தேதி சந்திரயான் நிலவில் தரையிறங்கும்.. இஸ்ரோ தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | செப்டம்பர் 6-ம் தேதி சந்திரயான் நிலவில் தரையிரங்கும்.. இஸ்ரோ தகவல்- வீடியோ

    பெங்களூரு: நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை 9 - 16- க்கு இடைப்பட்ட நாட்களில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று தெரிவித்துள்ளது.

    நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து, 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது.

    Chandrayaan2: Launch window between July 9-16 likely Moon

    இதனையடுத்து, சந்திராயன் 1 விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்தது. இதைத்தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.

    இந்நிலையில், சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் தேதி மற்றும் முழு விபரத்தை இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் 'சந்திரயான் - 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    தற்போது மூன்று தொகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டன. ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்பட்டு செப்டம்பர் 6ஆம் தேதி நிலவைச் சென்றடையும்' என தெரிவித்துள்ளது.

    25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் சரி உங்களால் முடியவே முடியாது.. திமுகவுக்கு முதல்வர் பதில் 25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் சரி உங்களால் முடியவே முடியாது.. திமுகவுக்கு முதல்வர் பதில்

    லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chandrayaan2. Launch window between July 9-16 & likely Moon-landing on Sept 6, 2019. GSLVMKIII will carry 3 modules of this lunarmission - Orbiter, Lander (Vikram), Rover (Pragyan).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X