பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன பண்றது... கூட்டாட்சி தத்துவம் நம்ம கையை கட்டிப் போட்டிருக்கு.. குமாரசாமி புலம்பல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Cauvery Water: தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா?..குமாரசாமி விரக்தி பேச்சு- வீடியோ

    பெங்களூர்: தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா என்ற கேள்விக்கு கர்நாடக விவசாயிகள் மத்தியில் முதல்வர் குமாரசாமி விரக்கியுடன் பேசியுள்ளார்.

    மாண்டியா மாவட்டம், கே ஆர் பேட்டை தாலுக்காவில் உள்ள அகல்யா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் (45) தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது இறுதிச் சங்கில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என வீடியோ மூலம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து சுரேஷின் வீட்டுக்கு சென்ற குமாரசாமி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    க்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா?.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்! #தமிழ்_வாழ்கக்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா?.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்! #தமிழ்_வாழ்க

    முழுமையாக

    முழுமையாக

    அப்போது அவர் கூறுகையில் மழை இல்லாததால் விவசாயிகள் தண்ணீர் இல்லை என கூறுகிறார்கள். மழை காலத்தில் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். என்னதான் நாம் தண்ணீரை சேமித்து வைத்தாலும் நம் மாநில மக்கள் அதை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது நம் மாநிலத்தின் துரதிருஷ்டம்.

    நீதிமன்றங்கள்

    நீதிமன்றங்கள்

    கூட்டாட்சி தத்துவத்தை நாம் பின்பற்றுவதால் இதுபோல் நம்மால் முழு தண்ணீரையும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆணையம், நடுவர் மன்றம், நீதிமன்றங்களுக்கு நாம் கட்டுப்பட வேண்டிய நிலை உள்ளது.

    விநியோகிப்பது

    விநியோகிப்பது

    குறிப்பிட்ட அளவு தண்ணீரை நாம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். காவிரி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு மத்தியிலிருந்து தமிழகத்திலிருந்தும் பிரதிநிதிகள் உள்ளனர். தண்ணீரை எப்படி விநியோகிப்பது என்பது குறித்து அவர்கள் இன்று முடிவு செய்வர்.

    முயற்சித்து

    முயற்சித்து

    அதை தீர்மானிக்க வேண்டிய நிலையில் நாம் இல்லை. காவிரி மட்டுமில்லை, கிருஷ்ணா, மகாதாயி ஆகிய ஆற்று நீரையும் நாம் முழுவதுமாக பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளோம். இதற்கெல்லாம் நான் மட்டுமே பொறுப்பல்ல. எனினும் இதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார் குமாரசாமி.

    திறந்துவிடும்

    திறந்துவிடும்

    கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இந்த விரக்தி பதிலின் மூலம் தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்காக கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    CM Kumarasamy blamed Country's federal system which restricts our state people to use water.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X