பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் காங். மேலிடம் அழைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கலங்கி நிற்கும் குமாரசாமி...கர்நாடகாவில் திடீர் திருப்பம்

    பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது என்றும், இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

    கர்நாடகா சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதிக்க வரும் திங்கள்கிழமை அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்

    Congress calls Karnataka MLAs meet on tomorrow

    பெங்களூருவில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு தாஜ் விவன்டா ஓட்டலில் தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

    கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓனர் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல்கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓனர் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல்

    அதிருப்தியில் பதவி விலகிய அமைச்சர் எம்டிபி நாகராஜ் கடந்த சனிக்கிழமை மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பினார். காங்கிரஸ் கட்சியிலேயே தொடர முடிவு செய்துள்ளார். ராஜினாமா முடிவையும் திரும்ப பெற்றுள்ளார்.அதேநேரம் மற்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் மும்பையிலேயே தங்கி இருக்கிறார்கள். யாரும் மீண்டும் பெங்களூரு திரும்ப விரும்பவில்லை.

    இந்த சூழலில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்கொள்ள தயார் என அறிவித்துள்ளார். 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மதசார்பற்ற எம்எல்ஏக்கள் உள்பட 16 எம்எல்ஏக்கள் குமாரசாமிக்கு எதிராக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளார்கள்.

    எனவே தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தற்போது உள்ள சூழலில் கர்நாடகா சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 116 இடங்களுடன் (காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37, பிஎஸ்பி 1) இடங்களுடன் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இவர்களுக்கு 2 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

    தற்போது 16 எம்எல்ஏக்களின் ஆதரவை இழப்பதால் கர்நாடகாவில் குமரசாமியின் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. அதேநேரம் 107 எம்எல்ஏக்களும் (2 சுயேட்சைகள்) ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக உள்ளது.,

    English summary
    Karnataka congress leader Siddaramaiah called for the meeting of the Congress MLAs as rebels refuse to budge
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X