பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நடக சட்டமன்றத்திற்கு வந்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?- வீடியோ

    பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழலில் ரிசார்ட்டில் தங்கியிருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், கர்நாடக சட்டமன்றத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

    பாஜக முடிந்தால் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபித்து காட்டட்டும் என கூறியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் ரிசார்ட்டுகள் என மாறி மாறி தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் விதான் சவுதாவிற்கு சென்றுள்ளனர்.

    Congress dissatisfied MLAs present in Karnataka Assembly .. Dapuma coalition government?

    கர்நாடகத்தில் ஆளும் கூட்டணி அரசிலிருந்து 16 காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் என இதுவரை 18 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

    இவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர். எனினும் இந்த ராஜினாமா கடிதங்கள் மீது முடிவெடுக்க சபாநாகருக்கு உச்சநீதிமன்றம் நாளை வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த பேரவை கூட்டத்தின் போது தாம் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயாராக உள்ளதாக கூட்டணி அரசின் முதல்வரான குமாரசாமி அறிவித்தார். இதனால் பதற்றமடைந்த பாஜக, தங்கள் எம்எல்ஏ-க்களை, மஜத விலை பேசி விட கூடாது என்பதற்காக ரிசார்ட்டுகள் பாதுகாப்பாக தங்க வைத்தது.

    அதிலும் முதல்முறை எம்எல்ஏ ஆனவர்கள் எதிரி முகாமிற்கு சென்று விட கூடாது என்பதற்காக, சுமார் 80 எம்எல்ஏக்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியது பாஜக. அதே போல காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி எம்எல்ஏ-க்களும் தனியாக ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இன்று கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என்பது சபாநாயகரின் முடிவை பொருத்து அமையும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரிசார்ட்டுளில் தங்கியிருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பேரவை கூட்டத்தில் பங்கேற்க விதான் சவுதா கட்டிடத்தை சென்றடைந்துள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆக உள்ளது. அதே நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க 105 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது.

    சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 உறுப்பினர்கள் மற்றும் 2 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழலில் ஆளும் கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

    நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் கண்டு வரும் கர்நாடக அரசியல் களம் இன்று ஏதேனும் மிகப்பெரிய திருப்பத்தை சந்திக்க போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    The Congress dissatisfied MLAs, who were staying at the resort in a hectic political environment, have left for Karnataka Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X