பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடக அரசியலில் செம ட்விஸ்ட்.. பாஜகவை உடைத்து பதிலடி கொடுக்கும் காங்கிரஸ்! பாஜக எம்எல்ஏ மாயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Politics : பாஜகவை உடைத்து பதிலடி கொடுக்கும் காங்கிரஸ்- வீடியோ

    பெங்களூர்: ஒருபக்கம் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்து வரும் நிலையில், பாஜக எம்எல்ஏக்களை ஈர்க்கும், முயற்சியில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைமை இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

    ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை உறுப்பினரான நாகேஷ் தனது ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் இன்று, கடிதம் அளித்தார்.

    14 பேர்

    14 பேர்


    இப்படி மொத்தம் 14 பேர் ஆட்சிக்கு, அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி எம்எல்ஏக்கள் பலம் பாஜக எம்எல்ஏக்கள் பலமான 105ஐ விட குறைந்துள்ளது. அதாவது 104 என்ற வகையில் கூட்டணி கட்சிகளின், எண்ணிக்கை குறைந்துள்ளது.

    எனவே உட்கார்ந்த இடத்திலேயே பாஜகவுக்கு ஆட்சி தேடி வருகிறது.
    ட்விஸ்ட்

    ட்விஸ்ட்

    ஆனால் இங்குதான் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது. ஆப்பரேஷன் தாமரை திட்டத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை பாஜக இழுத்ததைப் போல, பதிலுக்கு பாஜக எம்எல்ஏக்களை, தங்கள் பக்கம் இழுக்க இந்த கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    சுவிட்ச் ஆப்

    சுவிட்ச் ஆப்

    சிறுகுப்பா தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சோமலிங்கபா தொலைபேசி எண் இன்று காலை முதல், சுவிட்ச் ஆப், ஆகி இருப்பது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு, தலைமை அழைப்பு விடுத்துள்ள நிலையில் கட்சித் தலைமை இவரை அழைக்க தொடர்பு கொண்டதாகவும், ஆனால் போன் சுவிட்ச் ஆப்-இல் இருப்பதாகவும் தெரிகிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தொலைபேசி எண்ணும் சுவிட்ச்ஆப்பாகி உள்ளது.

    தொலைபேசி

    தொலைபேசி

    ஆந்திராவுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக அவர் குடும்பத்தோடு சென்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது பாஜகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிலடியாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சியும் பாஜக எம்எல்ஏக்களை இழுக்கிறார்களா என்ற சந்தேகம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Siruguppa Assembly Constituency MLA from BJP Somalingappa's phone is switched off create romour of reverse operation by Congress and JDS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X