பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்க பாருங்க, எம்எல்ஏ எப்படி படுத்திருக்காரு.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் காண்பித்த பகீர் போட்டோ

Google Oneindia Tamil News

Recommended Video

    Shrimant patil viral photo | சட்டசபையில் சிவகுமார் காண்பித்த பகீர் புகைப்படம்

    பெங்களூர்: காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கடத்தப்பட்டு, மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவகுமார், இது தொடர்பாக வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கர்நாடக சட்டசபையில் இன்று, முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு, தீர்மானத்தை தாக்கல் செய்தார். ஆனால், விப் உத்தரை பிறப்பிக்க அதிகாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது சரியில்லை, அதற்கு முடிவு தெரியாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா பாயின்ட் ஆப் ஆர்டர், பிரச்சினை கிளப்பினார்.

    Congress MLA Shrimant Patil kidnaped by BJP: DK Shivakumar

    இதனால் விவாதம் வேறு பாதைக்கு மாறியது. எனவே இழுபறி நீடித்ததால், உணவு இடைவேளைக்கு சபாநாயகர் சட்டசபையை ஒத்தி வைத்தார். இதன்பிறகு அவை கூடியதும், காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவகுமார், எழுந்து, ஒரு போட்டோவை காண்பித்தார்.

    அதில் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் படுத்த நிலையில் இருக்கும் படம் இருந்தது. சிவகுமார் கூறுகையில், பாஜகவினரால் ஸ்ரீமந்த் பாட்டீல் உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    ஸ்ரீமந்த் பாட்டீல் பெங்களூரில் எங்களோடு ரிசார்ட்டில் இருந்தார். அவருக்கு இதய நோய் என கூறி மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சென்னை சென்று, அங்கேயிருந்து, மும்பை சென்றுள்ளார். அவருடன் பாஜகவினர் சென்றுள்ளனர். இதற்கான ஆதாரங்களை சபாநாயகரிடம் நான் வழங்குகிறேன். இவ்வாறு கூறி ஆதாரங்களை சபாநாயகரிடம் வழங்கினார் அவர்.

    மேலும் சில காங்கிரஸ் உறுப்பினர்களும் இதே குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதையடுத்து, கர்நாடக எம்எல்ஏக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய உள்துறை அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். ஸ்ரீமந்த் பாட்டீல் விருப்பமின்றி மும்பை அழைத்துச் செல்லப்பட்டுள்ளாரா என்பதை விசாரித்து தனக்கு அறிக்கையளிக்கவும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

    English summary
    DK Shivakumar, Congress in Karnataka Assembly says, "There were 8 MLAs who traveled together, here is a picture of one of them (Shrimant Patil) lying inert on a stretcher, where are these people? I'm asking the Speaker to protect our MLAs." Uproar in the house after this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X