பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபரேஷன் லோட்டஸ் மீண்டும் தொடங்கியதா? கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் திடீர் ராஜினாமா!

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் திடீர் ராஜினாமா!- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்துள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இதை கவிழ்க்க பாஜக பல நாட்களாக திட்டமிட்டு வருகிறது. ஆனாலும் கஷ்டப்பட்டு இந்த கூட்டணி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

    Congress MLA Umesh Jadhav submits his resignation to the Speaker of the Karnataka

    கர்நாடக சட்டசபையின் பலம் 224. தற்போது ஆட்சி செய்து வரும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளம் 37 எம்எல்ஏக்கள் பலம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏ, கர்நாடகா பிரக்ன்யாவந்தா ஜனதா கட்சிக்கு 1 எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏ 1 என்று 120 பேர் இருக்கிறார்கள்.

    கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பெற 113 பேரின் ஆதரவு தேவை. கர்நாடக சட்டசபையில் பாஜகவின் பலம் 104 ஆகும். இந்த நிலையில்தான் கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது.

    இதற்காக ஆபரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தை வைத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்சி மாற செய்ய முயற்சித்தது. ஆனால் இதில் பெரிய அளவில் எந்த வெற்றியும் பாஜக கட்சிக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பதவி விலகுவார்கள் என்று கூறப்பட்டது.

    ஆனால் இதுநாள்வரை அப்படி எந்த சம்பவமும் நடக்காமல் இருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்துள்ளார். இவர் கர்நாடகாவில் சின்சோலி தொகுதி எம்எல்ஏ ஆவார். இது கர்நாடக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வழங்கினார் உமேஷ். இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் பலம் 121 எம்எல்ஏக்களாக குறைந்து உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 79 எம்எல்ஏக்கள் பலம் மட்டுமே உள்ளது.

     திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் வேண்டும்.. விடுதலை சிறுத்தைகள் டிமாண்ட்.. 2ம் கட்ட பேச்சுவார்த்தை திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் வேண்டும்.. விடுதலை சிறுத்தைகள் டிமாண்ட்.. 2ம் கட்ட பேச்சுவார்த்தை

    காங்கிரஸ் - மஜத கூட்டணியில் இருந்து கடந்த சில வாரம் முன் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டும் விலகி தனியாக ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் அதிர்ச்சி எம்எல்ஏக்கள், இந்த கூட்டணிக்கு எதிராக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்தது. அதன்பின் நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்திலும் இந்த 4 பேரும் கலந்து கொள்ளவில்லை.

    அதில், உமேஷ் ஜாதவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரெசார்ட்டில் தங்கி இருந்தவர்களில் இவரும் ஒருவர். இவரை போலவே இன்னும் மீதம் இருக்கும் 4 எம்எல்ஏக்களும் பதவி விலகுவார்களா? என்ற பெரிய கேள்வி எழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் மீண்டும் தொடங்கிவிட்டதா என்று பெரிய கேள்வி இதனால் உருவாகி உள்ளது.

    English summary
    Congress MLA Umesh Jadhav submits his resignation to the Speaker of the Karnataka
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X