பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குமாரசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தால் என்னவாகும் தெரியுமா.. டி.கே.சிவகுமார் வார்னிங்

Google Oneindia Tamil News

Recommended Video

    கலங்கி நிற்கும் குமாரசாமி...கர்நாடகாவில் திடீர் திருப்பம்

    பெங்களூர்: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை திரும்ப அழைத்துவரும் முயற்சிக்காக, கடந்த வாரம் மும்பைக்குச் சென்றவர் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார். ஆனால் அவர் முயற்சிகள் பலிக்கவில்லை.

    இந்த நிலையில், முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தானாக முன் வந்து அழைப்புவிடுத்துள்ளார். எனவே கர்நாடக அரசியல் க்ளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது.

    இதனிடையே, சிவகுமார் அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். அது தகுதி நீக்க அஸ்திரம். ஏற்கனவே, சபாநாயகரிடம் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சித்தராமையா வலியுறுத்திய நிலையில் சிவகுமார் கூறியுள்ள ஒரு கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    'ஸ்டாலின் நச் பதிலடி'.. டெல்லிக்கு போய் திமுக எம்.பி.க்களால் என்ன செய்ய முடியும் என கேட்டவங்களுக்கு!'ஸ்டாலின் நச் பதிலடி'.. டெல்லிக்கு போய் திமுக எம்.பி.க்களால் என்ன செய்ய முடியும் என கேட்டவங்களுக்கு!

    நம்பிக்கையுள்ளது

    நம்பிக்கையுள்ளது

    "எங்கள் எம்.எல்.ஏக்கள் அனைவர் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்கள் நீண்ட காலமாக இங்கேயே இருக்கிறார்கள். அவர்கள் புலிகளைப் போல போராடி வருகின்றனர். சில நல்ல விஷயங்கள் கடைசி நேரத்தில் நடக்கும் என்று, நான் நினைக்கிறேன்," என்றார் சிவகுமார்.

    சட்டம் தெளிவாக உள்ளது

    சட்டம் தெளிவாக உள்ளது

    மேலும் அவர் கூறுகையில், "நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியாது. சட்டம் மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் எம்.எல்.ஏக்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். சட்டம் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தால், அவர்கள் கட்சி உறுப்பினர் அந்தஸ்தை இழக்க நேரிடும். அவர்கள் கட்சியை விட்டு போகமாட்டார்கள், " என்று அவர் சொன்னார்.

    கட்சிகள் நிலைமை

    கட்சிகள் நிலைமை

    கர்நாடக கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 2 சுயேச்சைகள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். எனவே கூட்டணி அரசு பலம், 118லிருந்து 100ஆக குறைந்துள்ளது. 105 உறுப்பினர்களை கொண்ட பாஜகவுக்கு சுயேச்சைகள் ஆதரவோடு பலம் 107ஆக உள்ளது,

    கட்சித் தாவல் தடைச்சட்டம்

    கட்சித் தாவல் தடைச்சட்டம்

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விப் உத்தரவை மீறி வாக்களித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதைத்தான் சிவகுமார் மறைமுகமாக மிரட்டலாக முன்வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    English summary
    Karnataka minister DK Shivakumar, today expressed confidence his MLAs would come back and save the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X