பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?- வீடியோ

    பெங்களூர்: அதிருப்தி எம்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

    குமாரசாமி அரசு நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை இன்றே தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகரிடம் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது குமாரசாமியும் உடனிருந்தார்.

    Congress seeks rebel MLAs disqualification

    எடியூரப்பாவின் உதவியாளர், அதிருப்தி எம்எல்ஏக்களை சிறப்பு விமானத்தில் பெங்களூரிலிருந்து மும்பைக்கு அனுப்பியது, பாஜக தலைவர் அசோக்குடன், காங்கிரஸ் எம்எல்ஏ நாகராஜ் சேர்ந்து திரிந்த சம்பவம் உள்ளிட்ட பல விஷயங்களை சபாநாயகரிடம் அளித்த தங்கள் புகாரில் சித்தராமையாவும், குமாரசாமியும் குறிப்பிட்டுள்ளனர்.

    விப் உத்தரவு மூலமாக, எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி வாக்களிக்க வர வைக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியதால் மகிழ்ச்சியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள், நாளை சட்டசபைக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

    'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி

    அரசு கவிழப்போவது உறுதி என்ற நிலையில், போகிற போக்கில், அந்த எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பழி தீர்க்கலாம் என, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். உறுப்பினர்கள் பேசி பேசி கால நேரத்தை வீணடிக்க கூடாது, எதிர்க்கட்சியான எங்களுக்கு பேச அவகாசம் தேவையில்லை என்று பாஜக தலைவர்கள் முன்னாள் சபாநாயகர், போப்பய்யா தலைமையில், சபாநாயகரை சந்தித்து, இன்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    English summary
    Congress seeks rebel MLAs disqualification, Siddaramaiah and CM Kumaraswamy met Speaker Ramesh kumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X