பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க எப்படி அப்படி பேசலாம்? காங்கிரஸை விளாசிய எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் கட்சிக்கு எதிராகவும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்த எம்எல்ஏ ரோஷன் பெய்க்கிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன. ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானதில் இருந்தே கர்நாடக காங்கிரஸில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கர்நாடகாவில் ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.

அப்படி ஒரு நிலை வந்தால்... டிடிவி தினகரனால் அதிமுக திமுகவுக்கு நிச்சயம் தர்மசங்கடம்தான் அப்படி ஒரு நிலை வந்தால்... டிடிவி தினகரனால் அதிமுக திமுகவுக்கு நிச்சயம் தர்மசங்கடம்தான்

ரோஷன் பெய்க் போர்க்கொடி

ரோஷன் பெய்க் போர்க்கொடி

எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்ததால் கர்நாடகாவில் சில காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரும் 7வது முறையாக எம்எல்ஏவாக இருப்பவருமான ரோஷன் பெய்க் தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அவர் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஒரு திமிர் பிடித்த தலைவர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சி குறித்தும் அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பாஜகவை ஏற்கலாம்

பாஜகவை ஏற்கலாம்

இஸ்லாமியர்கள் காங்கிரஸின் வாக்கு வங்கியல்ல என்றும் இஸ்லாமியர்கள் காங்கிரஸ் கட்சியை மட்டும் பார்க்காமல் அதனை தாண்டியும் பார்க்க வேண்டும் தற்போதுள்ள சூழ்நிலையில் பாஜகவை ஏற்றுகொள்ளலாம் என்றார்.

பெய்க்குக்கு நோட்டீஸ்

பெய்க்குக்கு நோட்டீஸ்

ரோஷன் பெய்க்கின் இந்த பேச்சு கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரோஷன் பெய்க்கின் பேச்சு குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கர்நாடக காங்கிரஸ் மேலும் பல கலகங்கள் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Congress sends notice to Roshan Baig who slammed party and party leaders. Roshan Baig need to give explanation within a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X