பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரகாஷ் ராஜை ஆதரிப்போம்.. பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடட்டும்.. ஆனால்.. காங்கிரஸ்

Google Oneindia Tamil News

பெங்களூர்: நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அவருக்கு ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது நண்பரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் வலது சாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். அன்று முதல் பாஜகவை மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

Congress will back Prakash Raj if he formally joins the party: Dinesh Gundu Rao

இந்த நிலையில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்புவதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை நெட்டிசன்கள் வரவேற்றனர்.

இதையடுத்து 8 பேர் கொண்ட குழுவை அமைத்து பெங்களூர் மத்திய தொகுதியில் மக்களிடன் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகளை கேட்டறிந்தால் மட்டுமே தேர்தல் அறிக்கை தயாரிக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மதசார்பற்ற கட்சிகள் தன்னை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆம் ஆத்மி கட்சியும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் ஆதரவு தருவதாக அறிவித்தன. ஆனால் காங்கிரஸ் ஆதரவு தரவில்லை.

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரகாஷ் ராஜ் வைத்துள்ள கோரிக்கை குறித்து எங்கள் நிர்வாகிகளஉடன் ஆலோசனஐ நடத்தினோம்.

கட்சித் தலைமையுடனும் விவாதித்தோம். எங்களை பொறுத்தவரை அவர் காங்கிரஸில் இணைந்தால் பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்றார்.

English summary
Karnataka Pradesh Congress Committee (KPCC) president Dinesh Gundu Rao has indicated that the party will support actor Prakash Raj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X