பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஸ் மீது எழுதப்பட்டிருக்கும் கொரோனா, படுத்தபடி பயணிக்கும் மக்கள்.. அதுவும் சென்னையில்! என்ன இது?

Google Oneindia Tamil News

Recommended Video

    நடு கடலில் தவிக்கும் 3500 பேர்.. வேகமாக பரவும் கொரோனா.. திரில்லர் படங்களை மிஞ்சிய பயங்கரம் - வீடியோ

    பெங்களூர்: கொரோனா வைரஸ், சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுக்க தற்போது வேகமாக பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரசால் பலியானோர் எண்ணிக்கை 600ஐத் தாண்டிவிட்டது.

    இந்தியாவிலும், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். உலகம் முழுக்க இந்த வைரஸ் தொடர்பாக பேசி வருகிறது.

    கொரோனா, என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? ஒளிவட்டம் என்று அர்த்தம். சூரிய கிரகண காலகட்டங்களில் சூரியன் நிலவால் மறைக்கப்பட்டு எஞ்சிய பகுதி மட்டும் வட்ட வடிவில் தெரியும் அல்லவா? அது போன்ற ஒரு ஒளி வட்டத்திற்கு தான் இந்த பெயர்.

    அன்புச்செழியனை விடாமல் துரத்தும் வருமான வரித்துறை.. இன்றும் சோதனை.. கிடுக்கிப்பிடி விசாரணை!அன்புச்செழியனை விடாமல் துரத்தும் வருமான வரித்துறை.. இன்றும் சோதனை.. கிடுக்கிப்பிடி விசாரணை!

    தெரிந்த பெயர்

    தெரிந்த பெயர்

    இதைத்தான் கொடுமையான இந்த வைரஸ் பாதிப்புக்கும் பெயராக சூட்டி வைத்துள்ளார்கள். ஆனால் இந்த வைரஸ் பாதிப்புக்கு பிறகு இந்த பெயர் பரிச்சயமாகியதா என்றால் இல்லை. வெளிநாடுகளில் வேண்டுமானால் இது புதிதாக பரிட்சையமாகியிருக்கலாம். தென் மாநில மக்களுக்கு அறிந்த பெயர்தான்.
    ஏனெனில், கர்நாடக அரசு பேருந்து இதே பெயர் கொண்ட பஸ் கம்பெனியிலிருந்து கொள்முதல் செய்து, பேருந்துகளை இயக்கி வருகிறது.

    கொரோனா

    கொரோனா

    நீண்ட வருடங்களுக்கு முன்பாக குளிர்சாதன வசதி கொண்ட படுக்கை வசதி பேருந்துகளை கர்நாடக அரசு அறிமுகம் செய்தது. அந்த வகை பேருந்துகளின் தயாரிப்பாளர் பெயர் கொரோனா. இந்த பஸ் கம்பெனி தலைமையகம் ஹைதராபாத்தில் உள்ளது. கர்நாடக அரசு அம்பாரி என்ற பெயரில் இயக்கும் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ்கள், இந்த கம்பெனி சப்ளை பஸ்கள்தான்.

    பீதி வேண்டாம்

    பீதி வேண்டாம்

    இந்த பேருந்துகள் பெங்களூரிலிருந்து, சென்னை, கோவை போன்ற தமிழக நகரங்களுக்கும் இயக்கப்படுகின்றன. எனவே தமிழக மக்களும் இந்த பஸ் மற்றும் அதன் பெயரை பார்த்து பழகி இருப்பீர்கள். பெங்களூரிலிருந்து சென்னைக்கு கொரோனா வகை ஏசி படுக்கை வசதி கொண்ட பஸ்சில் கட்டணம் 800 ரூபாய்க்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெறும் பேருந்து என்ற அளவில் பார்க்கப்பட்டு வந்த இந்த பஸ் இந்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக பீதியுடன் பார்க்கப்படுகிறது.

    பஸ்கள்

    பஸ்கள்

    ஆனால், நாம் ஏற்கனவே சொன்னபடி இது வைரஸின் பெயர் கிடையாது. ஒளிவட்டம் என்ற அர்த்தத்தில் சூட்டப்பட்ட பெயர். எனவே பயப்படாதீர்கள். புதிதாக பார்ப்பவர்களுக்கு இந்த பஸ் வித்தியாசமாக தெரியலாம். ஆனால் ஏற்கனவே பழகியவர்களுக்கு இந்த பஸ் வழக்கமான ட்ரிப் அடிக்கும் பஸ்தான் என்பது தெரிந்திருக்கும். எனவே, மகிழ்ச்சியாக பயணம் செய்யுங்கள். ஹாப்பி ஜர்னி!

    English summary
    Corona bus is being operated by KSRTC between their cities including Bengaluru to Chennai and other major cities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X