பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா நோயாளி இறந்ததால் ஆத்திரம்.. ஆம்புலன்ஸ் தீ வைத்து எரிப்பு.. மருத்துமனை மீது தாக்குதல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனாவால் நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆம்புலன்ஸை தீ வைத்து எரித்ததுடன், மருத்துவரையும் தாக்க முயன்றனர். மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூருவில் இருந்து 500 கி.மீ தூரத்தில் உள்ள நகரம் பெலகாவி. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த ஆம்புலன்ஸை தீ வைத்து எரித்தனர்.

corona Patient Dies In Karnatakas Belagavi Hospital, Family Torches Ambulance

அத்துடன். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவரை அவர்கள் தாக்க முயன்றனர். அத்துடன் அந்த மருத்துவமனை மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே கொரோனா நோயாளியின் குடும்பத்தினரால் தீ வைத்து எரிக்கப்பட்டஆம்புலன்ஸ் மீது தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

நோயாளிகளின் மரணத்தால் ஆத்திரம் அடைந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அறிந்த, பெலகாவி போலீஸ் கமிஷனர் தியாகராஜா உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

டம்மி கொரோனா வைரஸை உருவாக்கிய அமெரிக்கா.. செம்ம கிராக்கி.. இதனால் என்ன பயன்! டம்மி கொரோனா வைரஸை உருவாக்கிய அமெரிக்கா.. செம்ம கிராக்கி.. இதனால் என்ன பயன்!

இதனிடையே கர்நாடகாவில் புதன்கிழமையான நேற்று ஒரே நாளில் 4,764 புதிய COVID-19 கேஸ்கள் மற்றும் 55 இறப்புகள் பதிவாகியது., மொத்த தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 75,833 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,519 ஆகவும் கர்நாடகாவில் உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

English summary
The family members of a COVID-19 victim allegedly set an ambulance on fire in Karnataka's Belagavi, around 500 km from capital Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X