பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சிஎம்மை பாக்கணும்.. எனக்கு கொரோனா வந்திருக்கு" பதறியடித்து வந்த ஆம்புலன்ஸ்.. சங்கர் போட்ட ஸ்கெட்ச்!

ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சங்கர் என்பவர் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளார்

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை... என்ன செய்வது என்றும் தெரியாமல், முதல்வர் வீட்டுக்கு நடந்தே போய் உதவி கேட்டு அதிர வைத்துள்ளார் கொரோனா நோயாளி ஒருவர்... இந்தியாவிலேயே குறைந்த அளவிலான டெஸ்ட்டுகளை செய்யும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தின் பெங்களூரில்தான் இந்த அக்கப் போர்!!

கொரோனாவிலிருந்து கூட தப்பி விடலாம் போல.. ஆனால் இந்த ஆம்புலன்ஸ் கிடைக்காமல், உரிய டாக்டர்கள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்குத்தான் அதிலிருந்து தப்ப வழியே தெரியவில்லை. இது இந்தியா முழுவதும் பொதுவான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறித்த நேரத்துக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை. அதை விட முக்கியமாக டாக்டர்களிடம் போனால் எட்ட நின்று பார்த்து விட்டு அனுப்பி விடுகிறார்கள்.

பெரிய அவஸ்தையாக உள்ளது மக்களுக்கு. இந்த நிலையில்தான் பெங்களூரில் ஒரு பாசிட்டிவ் நோயாளி ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போய் தனது மனைவி, குழந்தைகளுடன் முதல்வர் வீட்டுக்கே போய் நியாயம் கேட்ட அதிர வைத்து விட்டார். அந்த நபரின் பெயர் சங்கர். இவரது சொந்த ஊர் தாவணகரே. ஆனால் மனைவி குழந்தைகளுடன் பெங்கள் பனசங்கரி பகுதியில் வசித்து வருகிறார்.

சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு

சோதனை

சோதனை

இவருக்கு திங்கள்கிழமை காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்குப் போய் சோதனை செய்தார். ஆனால் அந்த மருத்துவமனையில் சேர்க்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை இவருக்குப் போன் வந்தது. அதில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. உங்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளனர்.

பாதுகாவலர்கள்

பாதுகாவலர்கள்

முதல்வர் வீட்டுக்குப் போன அவர் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் முதல்வரை பார்க்க வேண்டும் என்று கூற அவர்கள் விவரம் கேட்க, இவரும் என்ன நடந்ததுன்னு சொல்ல பதறிப் போய் விட்டனர் பாதுகாவலர்கள். உடனே சங்கரை தனியாக உட்கார வைத்து விட்டு முதல்வருக்கு வேகமாக தகவல் கொடுத்தனர். நடந்ததைக் கேட்ட முதல்வர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து சங்கரை பத்திரமாக விக்டோரியா பொது மருத்துவமனையில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

நியாயம்

நியாயம்

பிறகென்ன, பறந்து வந்தது ஆம்புலன்ஸ். சங்கரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பத்திரமாக சேர்த்தனர் அதிகாரிகள். முதல்வர் வீட்டுக்குப் போவதற்கு முன்பு பவசங்குடி காவல் நிலையத்திற்கும் ஆட்டோவில் தனது மனைவி குழந்தைகளுடன் போய் உதவி கேட்டுள்ளார் சங்கர். ஆனால் அங்கிருந்தோர் அவரை விரட்டி விட்டுள்ளனர். எல்லாம் சரிவராமல் போகவேதான் முதல்வரிடமே நியாயம் கேட்க கிளம்பி விட்டார் சங்கர்.

Recommended Video

    கேமரா வடிவில் வீடு கட்டிய Photographer
    நோயாளி

    நோயாளி

    "நோயுடன்தான் நாம் போராட வேண்டும்.. நோாளியுடன் அல்ல" என்பதை அதிகாரிகள் இப்படி தப்பு தப்பாக புரிந்து கொண்டு, நோயாளிகளை விரட்டி விட்டால் எப்படிப்பா நாட்டை விட்டு கொரோனாவை ஒழிக்க முடியும்.. பார்த்து பண்ணுங்க ராஜாக்களே.!

    English summary
    corona positive man, kin walk to Karnataka CM’s house for help
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X