பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐயோ கொரோனா வைரஸ்.. அரசு பஸ்சை துடைத்தெடுக்கும் ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொரோனா வைரஸ் பீதி நாடு முழுக்க அதிகரித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை, தவிர்க்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தோரிடமிருந்து கொரோனா வைரஸ், அவர்களின் உறவினர்களுக்கு பரவி, பாதிப்பு அதிகரித்துள்ளது.

Recommended Video

    ஐயோ கொரோனா வைரஸ்.. அரசு பஸ்சை துடைத்தெடுக்கும் ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ

    வட இந்தியா, தென் இந்தியா என்று பாகுபாடு இன்றி பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்படுவதை பார்க்க முடிகிறது. சளி, காய்ச்சல் போன்றவை, கொரோனா பாதிப்பு அறிகுறிகளாகும். தும்மல் போன்றவற்றின் மூலம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும் என்பதால், பஸ் போன்ற பொதுப் பயன்பாட்டு வாகனங்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

    Corona scare: KSRTC government buses cleaned up by the employees

    இதோ இந்த வீடியோ, கர்நாடக அரசு பேருந்து கழக பஸ்சில் எடுக்கப்பட்டுள்ளது. டெப்போவில் நிற்கும் பஸ்சில், ஸ்ப்ரே அடித்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. ஊழியர்கள் மாஸ்க் அணிந்துள்ளனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இருப்பினும், உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை அணிய கொடுக்காமல் சுத்தம் செய்ய வைத்துள்ளது அந்த சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஒருமுறை பயன்படுத்திய ஆடையை அவர்கள் மறுபடியும் பயன்படுத்த முடியாது. இதெல்லாம் இந்தியாவில் நடக்கிற கதையா என்றும், நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர்.

    English summary
    KSRTC government buses cleaned up by the employees as Corona scare spread in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X