பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா படுத்தும்பாடு.. மருத்துவ கண்காணிப்பில் சீனா சென்று வந்த இரு பெங்களூர்வாசிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனா எதையோ மறைக்கிறது.. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை !

    பெங்களூர்: கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதை தொடர்ந்து அங்கிருந்து வந்த இரு பெங்களூர்வாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவி 80 -க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 600-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Coronavirus: 2 Bengaluru residents kept under medical supervision

    வவ்வால்களை சாப்பிட்ட பாம்பிலிருந்து இந்த நோய் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சீனாவிலிருந்து வருவோரை அந்தந்த மாநில மருத்துவ குழுவினர் சோதனைக்குட்படுத்தி அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என சோதனையிடுகின்றனர்.

    அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்தியாவிலும் இந்த நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது இரு நிலைகள் கொண்ட ஒரு நோய் ஆகும். முதல் நிலையில் இருந்தால் உயிரை காப்பாற்ற முடியும் என்றும் இரண்டாம் நிலைக்கு சென்றுவிட்டால் உயிரிழப்பு நிச்சயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சீனாவிலிருந்து வந்த ராஜஸ்தான், பீகாரைச் சேர்ந்த தலா ஒருவருக்கு இந்த நோய் அறிகுறி தென்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த இருவர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி சீனாவுக்கு சென்றுவிட்டு திரும்பினர்.

    சீனா செல்ல ரெடியாக நிற்கும் ஏர் இந்தியா விமானம்.. உத்தரவிட்டதும் கிளம்பும்! கொரோனா கொடுமைதான் காரணம்சீனா செல்ல ரெடியாக நிற்கும் ஏர் இந்தியா விமானம்.. உத்தரவிட்டதும் கிளம்பும்! கொரோனா கொடுமைதான் காரணம்

    ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் சளி தொல்லை இருந்ததை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா சென்றுவிட்டு திரும்பியவர்கள் காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சினை இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    English summary
    2 Bengaluru residents who visited China kept under medical supervision as preventive measure.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X