பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரயிலில் வந்தார்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாது.. இப்போது பலி.. கர்நாடகாவை உலுக்கிய முதியவர்!

கர்நாடகாவில் முதியவர் ஒருவர் கொரோனா காரணமாக பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் முதியவர் ஒருவர் கொரோனா காரணமாக பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருடன் ரயிலில் பயணித்த நபர்கள் யார் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.

Recommended Video

    கொரோனாவை கட்டுபடுத்த சிகிச்சை - பெங்களூரு டாக்டர் அதிரடி

    கர்நாடகாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை கொரோனா காரணமாக 62 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெங்களூரில்தான் கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கொரோனாவால் 68 ஆயிரம் பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    நேற்று இரவு மட்டும் அங்கு புதிதாக 4 பேருக்கு கொரோனா ஏற்ப்பட்டுள்ளது. இன்று காலை கொரோனா காரணமாக 65 வயது முதியவர் பலியானார். கடந்த ஒரு வருடத்தில் ஒருமுறை கூட இவர் வெளிநாடு செல்லவில்லை.

    டெல்லி சென்றார்

    டெல்லி சென்றார்

    ஆனால் அதே சமயம் கடந்த மார்ச் 5ம் தேதி டெல்லி சென்று இருக்கிறார். டெல்லிக்கு இவர் சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் மூலம் சென்று வந்துள்ளார். அங்கு ஜம்மா மசூதியில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் மார்ச் 11ம் தேதி திரும்பி உள்ளார். டெல்லி நிசாமுதின் ரயில் நிலையத்தில் இருந்து இவர் டெல்லிக்கு வந்துள்ளார். மார்ச் 11ம் தேதி பெங்களூர் வந்தவர் மார்ச் 14ம் தேதி சொந்த ஊர் சிராவிற்கு சென்றுள்ளார்.

    அறிகுறிகள் வந்தது

    அறிகுறிகள் வந்தது

    அதன்பின் மார்ச் 18ம் தேதி இவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. பின்னர் மார்ச் 23ம் தேதி இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று கடைசியாக செய்யப்பட்ட சோதனையில் இவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு இவர் பலியானார். இவரின் உறவினர்கள் யாருக்கும் கொரோனா இல்லை.

    மர்மம்

    மர்மம்

    இவரின் நண்பர்கள் யாரும் வெளிநாடு சென்று திரும்பவில்லை. ஆனால் இவருக்கு மட்டும் எப்படி கொரோனா ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதனால் இந்தியாவில் ஸ்டேஜ் 3 கொரோனா பரவல் வந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. இவருடன் ரயிலில் பயணித்த நபர்களுக்கும் இவர் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    மார்ச் 11ம் தேதி

    மார்ச் 11ம் தேதி

    இவருடன் ரயிலில் பயணித்த எல்லோரும் அது தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். டெல்லியில் இருந்து மார்ச் 11ம் தேதி பெங்களூர் யஷ்வந்த்பூர் வந்த அந்த ரயிலில் இருந்த எல்லோரும் இது தொடர்பாக தகவல் அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகாவில் பல பேருக்கு கொரோனா பரவி இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

    English summary
    Coronavirus: A 65-year-old person who traveled from Delhi to Karnataka dies today who didn't have any contact history.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X