பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. சாலையிலேயே விழுந்து இறந்த நபர்.. 4 மணி நேரம் நடுரோட்டில் கிடந்த உடல்.. பெங்களூரில் ஷாக்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் கொரோனாவால் பலியான நபர் ஒருவரின் உடல் நடு சாலையில் மூன்று மணி நேரம் கிடந்த அவலம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் கடந்த சில நாட்களாக கொரோனா கேஸ்கள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகமாகி வருகிறது.

பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 994 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக பெங்களூரில் 7173 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டு இருக்கிறது.

அதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா.. 64 பேர் பலி.. மொத்த பாதிப்பு 102721ஐ தொட்டது!அதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா.. 64 பேர் பலி.. மொத்த பாதிப்பு 102721ஐ தொட்டது!

சம்பவம்

சம்பவம்

இந்த நிலையில் பெங்களூரில் நடந்த சம்பவம் ஒன்று அங்கு எல்லோரையும் பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூரில் கொரோனாவால் பலியான நபர் ஒருவரின் உடல் நடு சாலையில் மூன்று மணி நேரம் கிடந்த அவலம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இருக்கும் ஹனுமான் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட 64 வயது நபர் ஒருவர் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார்.

ஆம்புலன்ஸ் உதவி

ஆம்புலன்ஸ் உதவி

எங்கள் வீடு முன் ஆம்புலன்ஸை நிறுத்த வேண்டாம். அப்படி நிறுத்தினால் பக்கத்து வீட்டில் எல்லோரும் பயப்படுவார்கள். அதனால் வீட்டிற்கு வெளியே சாலையில் சந்திப்பில் ஆம்புலன்ஸை நிறுத்துங்கள், நான் வந்து ஏறிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் சாலையில் வரப்போகும் ஆம்புலன்சில் ஏறுவதற்காக அந்த 64 வயது நபர் சாலையை நோக்கி சென்றுள்ளார்.

மயங்கி விழுந்தார்

மயங்கி விழுந்தார்

ஆனால் செல்லும் வழியிலேயே சாலையிலேயே அவர் மயங்கி விழுந்தார். இந்த நிலையில் ஆம்புலன்சுக்காக காத்து இருந்த அவர் சாலையிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அதோடு அவரின் உடல் அந்த சாலையிலேயே 4 மணி நேரம் தூக்க ஆள் இல்லாமல் கிடந்தது. ஆம்புலன்ஸ் அங்கு வந்து அவரின் உடலை எடுத்து செல்ல 4 மணி நேரம் ஆகி உள்ளது.

Recommended Video

    கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா... அச்சத்தில் மக்கள்
    மிக மோசம்

    மிக மோசம்

    அதுவரை அந்த உடல் கேட்பாரின்றி கிடந்தது உள்ளது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் மாநகராட்சிக்கு எதிராக இதனால் பலரும் குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர். பெங்களூரில் மாநகராட்சி ஆணையர் அணில் குமார் இது தொடர்பாக கண்டிப்பாக விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

    English summary
    Coronavirus: A patient died on-road as the ambulance couldn't reach to him even 4 hours in Bangalore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X