பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

25 மாடி குடியிருப்பு.. ஐடி ஊழியர்.. கொரோனாவோடு பெங்களூரில் சுற்றினார்.. நடுக்கத்தில் சிலிக்கான் வேலி

ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு பெங்களூரில் கொரோனா வைரஸ் தாக்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு பெங்களூரில் கொரோனா வைரஸ் தாக்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பெங்களூர் முழுக்க பல இடங்களுக்கு சுற்றியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கொரோனா பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் | Bengaluru: Corona Affected guy travelled in Bus

    உலகில் மொத்தம் 80 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3118 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் மட்டும் 3000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள்.

    அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 91000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 26 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    பாதிப்பு

    பாதிப்பு

    இந்த வைரஸ் ஹைதராபாத்தில் ஒருவருக்கு பரவி உள்ளது. இவர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் பணி நிமித்தமாக இவர் துபாய் சென்றுள்ளார். அங்குதான் இவருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. அங்கு இவர் சில ஹாங்காங் நண்பர்களுடன் பழகி உள்ளார். பின் அங்கிருந்து பெங்களூர் வந்துள்ளார். பெங்களூரில் நான்கு நாட்கள் தங்கி இருக்கிறார்.

    காய்ச்சல் வந்தது

    காய்ச்சல் வந்தது


    அப்போதுதான் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இந்த காய்ச்சல் சாதாரண காய்ச்சல் என்று அதை சோதிக்காமல் அலுவலகம் சென்று வந்துள்ளார். பெங்களூரில் இவர் இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்
    25 மாடி குடியிருப்பில் இருக்கிறார். அலுவலக பேருந்தில் அலுவலகத்திற்கு சென்று திரும்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதேபோல் கடந்த வாரம் பைக்கில் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.

    நிறைய ஹோட்டல்

    நிறைய ஹோட்டல்

    நிறைய ஹோட்டல்களுக்கு இவர் சென்று திரும்பி இருக்கிறார். இவர் ஊர் சுற்றிய போதெல்லாம் அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதன்பின் வார இறுதியில், இவர் தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அதன்பின்தான் இவர் மருத்துவரை சென்று சந்தித்துள்ளார். ஹைதராபாத்தில் இவருக்கு தீவிரமாக சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

    பெங்களூர் எப்படி

    பெங்களூர் எப்படி

    இவர் பேருந்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் பெங்களூரில் தற்போது இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவரை தற்போது தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவரின் அலுவலகத்தில் எல்லோருக்கும் வீட்டில் இருந்து பணியாற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    என்ன தீவிரம்

    என்ன தீவிரம்

    இவர் சென்ற பேருந்தில் இருந்த 43 பேரும் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவரின் ரூம் மேட்கள், அலுவலக நண்பர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் எல்லோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறது. இவரை தொடர்பு கொண்ட நபர்கள் எல்லோருக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று தீவிரமாக சோதனை நடந்து வருகிறது.

    English summary
    Coronavirus: Bangalore techie roams around with COVID-19 before the diagnostic in Hyderabad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X