பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. பெங்களூரில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை.. மறு உத்தரவு வரும்வரை ப்ரீகேஜி பள்ளிகளுக்கு விடுமுறை

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் பீதிதான் இதற்கு காரணம்.

Recommended Video

    Corona Virus Update : எத்தனை பேருக்கு கொரானா?

    "சுகாதார ஆணையரின் ஆலோசனையின் பேரில், பெங்களூரு வடக்கு, தெற்கு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள எல்.கே.ஜி மற்றும் யுகேஜி பள்ளிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளோம்" என்று மாநில முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் தெரிவித்திருந்தார்.

    Coronavirus: Bengalore shuts pre-primary sections of schools until further notice

    அமைச்சர் தாமதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டதால், பல பள்ளிகளும், இன்று காலை, பெற்றோருக்கு, தங்கள் பள்ளிகளில் விடுமுறை விடப்பட்ட தகவலை தெரிவித்தன. மறு உத்தரவு வரும்வரை விடுமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்டை மாநிலங்களான கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில், கொரோனா பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து இந்த நடவடிக்கை அவசியம் என்று சுகாதார, குடும்ப நலன் மற்றும் ஆயுஷ் சேவைகள் ஆணையர் பங்கஜ் குமார் பாண்டே தெரிவித்தார்.

    "இதுதொடர்பாக, பிபிஎம்பி மற்றும் பெங்களூரு நகர்ப்புறங்களில் கேஜி-க்கு முந்தைய, எல்.கே.ஜி மற்றும் யுகேஜி ஆகியவற்றில் உடனடியாக விடுமுறையை அறிவிக்கவும், நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான மறு உத்தரவுகள் வரும் வரை விடுமுறை தொடர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது," என்று அரசின் சுற்றறிக்கை கூறுகிறது.

    இதுவரை கர்நாடக மாநிலத்தில் 890 பேர் கண்காணிப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் 258 பேர் 28 நாள் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர், 622 பேர் தனிமைப்படுத்தலின் கீழ் வீட்டிலேயே உள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. COVID-19 பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் இதில் அடங்குவர்.

    மொத்தம் ஆறு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, அறிகுறிகளுக்கான நபர்களின் 416 மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 357 மாதிரிகள் எதிர்மறையாக சோதனை செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடகா இதுவரை 87,066 பயணிகளை ஸ்க்ரீன் செய்துள்ளது. 5,256 பயணிகள் மங்களூர் மற்றும் கார்வார் துறைமுகங்களில் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளனர்.

    English summary
    Pre-primary sections of most schools in Bengaluru will remain shut until further notice as a precautionary step following rising cases of COVID-19, or the novel coronavirus, in the country, the Karnataka government has said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X