பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளோம்.. விரைவில் டெஸ்டிங்.. பெங்களூர் டாக்டர் அதிரடி

கொரோனாவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொரோனவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க அல்லது கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் சென்ற பின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களால் கண்டுபிடிக்க முடியாது.

காரணம் கொரோனா வைரஸ், உடலில் இருக்கும் சாதாரண செல் போல வேடமிட்டு, அதற்கு உரிய சிக்னல்களை அனுப்புவதால், நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் குழம்பி போய், கொரோனாவை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இதனால் உடலை தாக்கும் கொரோனா, நோய் எதிர்ப்பு சக்தி செல்களை மொத்தமாக செயலிழக்க செய்கிறது.

கொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி!

மருத்துவம்

இந்த நிலையில்தான் கொரோனாவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடார்பாக விஷால் ராவ் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்து மனித உடலில் கொரோனா காரணமாக செயலிழந்த நோய் எதிர்ப்பு திறனை மீட்டு கொண்டு வருவது ஆகும்.

இது தடுப்பூசி இல்லை

இது தடுப்பூசி இல்லை

இது மருந்துதான். ஆனால் தடுப்பூசி கிடையாது. மனித உடலில் உள்ள சைட்டோகைனஸ் (cytokines) எனப்படும் எதிர்ப்பு சக்தி புரதம், நோய் செல்களை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சைட்டோகைனஸ்தான் பல்வேறு மருந்துகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு புரதங்களிலும், வைரஸ்களை கண்டுபிடிப்பதிலும் இந்த சைட்டோகைனஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது.

ஒரு புதிய கலவை

ஒரு புதிய கலவை

பல்வேறு சைட்டோகைனஸ் கலவையை உருவாக்கி, மனித உடலில் மீண்டும் செலுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா செல்களை கண்டுபிடிப்பதில், நோய் எதிர்ப்பு செல்களை மீண்டும் தூண்டுவதில் இந்த சைட்டோகைனஸ் உதவும், என்று அவர் கூறியுள்ளார். இந்த வார இறுதியில் இது சோதனைக்கு தயார் ஆகும். இதற்காக மத்திய அரசிடம் சோதனை அனுமதி கேட்டு இருக்கிறோம். அதேபோல் உடலில் இருக்கும் இன்டர்பெரான் (interferon) எனப்படும் செல்கள் நோய் எதிர்ப்பு திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த செல்கள் உதவும்

இந்த செல்கள் உதவும்

இன்டர்பெரான் செல்கள் கொரோனா காரணமாக வெளியே சுரப்பது தடுக்கப்படுகிறது. இதுதான் நோய் எதிர்ப்பை குறைக்கிறது. இதனால் இதை செயற்கையாக நாம் உடலின் உள்ளே செலுத்த வேண்டும். இந்த இன்டர்பெரான் (interferon) மற்றும் சைட்டோகைனஸ் (cytokines) கலவை மற்றும் வேறு சில எதிர்ப்பு செல்கள் கலவை மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை கட்டுப்படுத்த இன்டர்பெரான் உதவும் என்பதற்கு எங்களிடம் சில சோதனை முடிவுகள் உள்ளது .

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

இதை ஒன்றாக சேர்த்து சோதனை செய்ய போகிறோம். விரைவில் இதன் முடிவுகளை அறிவிப்போம் என்று, புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார். உலகமே இந்த கொரோனாவிற்கு சிகிச்சை என்ன? மருந்து என்ன? என்று குழம்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து அதற்கான சிறிய வெளிச்சம் தோன்றி உள்ளது. பெரியம்மை, போலியோ ஆகிய நோய்களை இந்தியா விரட்டியது போல கொரோனாவையும் விரட்டும் என்று உலக சுகாதார மையம் நம்பிக்கை தெரிவித்தது.. அதற்கான அறிகுறிகள் தெரிய துவங்கி உள்ளது.

English summary
Coronavirus: As an ray of hope, Bengaluru doctor claims to found an effective treatment for COVID-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X