பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளதாக கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்தார்.

Recommended Video

    கொரோனா குறித்த முன்பே கணித்த புத்தகங்கள், படங்கள்

    இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஐந்து பேருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும், தெலுங்கானவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.,

    Coronavirus: Bengaluru IT professional who returned from US tests positive

    இந்நிலையில் கர்நாடகாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூரு திரும்பிய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகர் தெரிவித்தார்.

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்றும் அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

    Coronavirus: Bengaluru IT professional who returned from US tests positive

    இதனிடையே பஞ்சாப்பிலும் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அண்மையில் இத்தாலி சென்று திரும்பியவர் ஆவார். இதுவரை இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் 366 பேர் உயிரிழந்துள்ளனர். 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Karnataka Reports First Coronavirus: Case : Karnataka reports its first coronavirus case in Bengaluru -- an IT professional who returned from US tests positive, says minister K Sudhakar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X