பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ஆச்சரியம்.. இருமல் சத்தத்தை வைத்தே கொரோனாவை அறியலாமா.. வரப்போகிறது "கோஸ்வரா".. அசத்தல் முயற்சி

இருமல் சத்தத்தை வைத்து கொரோனா அறிகுறி கண்டறிய முயற்சி நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

பெங்களூரு: என்ன ஆச்சரியம்.. இருமல் சத்தத்தை வைத்தே நமக்கு கொரோனா இருக்கா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியும் என்று அடித்து சொல்றார்கள் நம் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்!!

இந்த கொரோனாவைரஸ் உலகம் இதற்கு முன்பு கண்டிராதது.. புதுமையானது.. பயங்கரமானது.. லட்சக்கணக்கான விஞ்ஞானிகள் மண்டையை உடைத்து கொண்டு இதற்கு மருந்து கண்டுபிடிக்க ராப்பகலாக போராடி வருகிறார்கள்.

 coronavirus: can cough sound help coronavirus diagnosis yes, says bengaluru iisc

இந்த வைரசுக்கான அறிகுறியே இதுதான் என்று உறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்குள், அறிகுறி இல்லாதவர்களையும் தாக்க தொடங்கிவிட்டதுதான் இதன் கொடூரமே.. அதனால் யாரை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இந்த நேரத்தில்தான் நம்முடைய ஆராய்ச்சியாளர்கள் ஒரு நம்பிக்கை தகவலை தெரிவித்துள்ளனர்.. ஐஐஎஸ்சி அதாவது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் அறிகுறி குறித்த ஒரு முக்கியமான தகவலை கூறுகிறார்கள். இந்த குழுவில் ஐஐஎஸ்சி-யின் எலக்ட்ரிக் என்ஜினியங் உதவி பேராசிரியராக ஸ்ரீராம் கணபதியும் இணைந்துள்ளார். இருமல் சத்தத்தை கொண்டு கொரோனா நோயாளிகளை அடையாளம் காணலாம் என்று இவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

அதாவது, இருமல் மற்றும் பேசும்போது குரல் பதிவை கொண்டு இந்த அடையாளம் காணலாம் என்றும் நிச்சயம் இந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் மிக மிக வேகமாக கொரோனா நோயாளிகளை கண்டறியலாம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த செலவும் மிகவும் குறைவாகத்தான் ஆகுமாம். இதை பற்றின ஏராளமான சோதனைகள் மேற்கொள்ள போவதாகவும், கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதித்தவர்கள் இருமுவதற்கும், வேறு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அதனால் இருமுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாகவும், அந்த இருமல் சத்தத்தின் வித்தியாசங்களை வைத்தே அறிகுறியை கண்டறிந்துவிட முடியும் என்கிறார்கள். இதற்கு "கோஸ்வரா" என்று ஒரு பெயரையும் வைத்துள்ளனர்.

இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்! இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்!

இதன் அடிப்படையே இருமல் சத்தம் மற்றும் குரல் பதிவுதான்.. இந்த டெக்னாலஜியை செல்போனில் அல்லது சோஷியல் மீடியாவில் ஆப்களாக கொண்டு வரவும் திட்டமிட்டு வருகிறார்கள்.. அப்படி பதிவு செய்துவிட்டால், கொரோனா பாதித்து யார் இருமினாலும் இதில் தெரிந்துவிடுமாம்.. கொரோனா பாதித்தவரின் இருமல் மற்றும் குரல் பதிவு, அதேபோல வேறு பிரச்சனையால் பாதித்தவரின் இருமல் மற்றும் குரல் பதிவினை சேகரித்து வருகிறார்கள்.

அதன் மாதிரியில் சோதனைகளும் நடந்து வருகிறது. இதுவரை சோதனை நடத்தியதில் சில பாசிட்டிவ் விஷயங்களும் கிடைத்துள்ளன.. இரண்டு வித இருமல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. இருமல் சத்தம் வித்தியாசமாக கேட்கிறதாம்.. இருந்தாலும் குறைவான டெஸ்ட்கள் தான் இதுவரை செய்யப்பட்டுள்ளதால், இன்னும் கூடுதலான பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

Recommended Video

    Bangalore Boom Sound Truth Explained In Tamil

    அதன் முடிவுகளும் தெரிந்துவிட்டால், இனி யாருக்கெல்லாம் இந்த கொரோனா பாதிப்பு இருக்குமோ, அவர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.. ஒரு பெரிய பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது போலவும் நமக்கு இருக்கும்!!

    English summary
    coronavirus: can cough sound help coronavirus diagnosis yes, says bengaluru iisc
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X