Just In
மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிற்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்டார்!
பெங்களூர்: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

இந்தியாவில் இதுவரை 8960205 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 131640 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 8383361 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சதானந்த கவுடா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தன்னை சந்தித்த நபர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சதானந்த கவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.