பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியர்.. ஷாக் தகவல்கள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் என்ஜினியர் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்திற்கு பேருந்தில் பயணம்செய்திருந்தது தெரியவந்துள்ளது. இவருடன் பெங்களூருவில் நெருக்கமாக பணிபுரிந்தவர்கள் அனைவரையும் கர்நாடக அரசு தனிமைப்படுத்தி வைத்து பரிசோதித்து வருகிறது.

Recommended Video

    கொரோனா பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் | Bengaluru: Corona Affected guy travelled in Bus

    தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் நெருக்கமானவர்களை , உடன் பணிபுரிந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுள்ளதா என சோதனை செய்யப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு 24 வயதாகும் சாப்ட்வேர் என்ஜினியருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா சுகாதார துறை அமைச்சர் ராஜேந்தர் கூறுகையில், பெங்களூருவில் இவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் துபாயில் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களுடன் இவர் வேலை பார்த்து வந்திருக்கிறார் அங்கிருந்து கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வந்திருக்கிறார்..

    மாற்றம்.. முன்னேற்றம்.. எடப்பாடியார்.. சிஏஏ விவகாரத்தில்.. விரைவில் அதிரடி.. பரபரக்கும் கோட்டை!மாற்றம்.. முன்னேற்றம்.. எடப்பாடியார்.. சிஏஏ விவகாரத்தில்.. விரைவில் அதிரடி.. பரபரக்கும் கோட்டை!

    பேருந்தில் பயணம்

    பேருந்தில் பயணம்

    வைரஸ் பாதித்த நபர் கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி அல்லது 20ம் தேதி பெங்களூருவுக்கு வந்திருக்கிறார். அதன்பிறகு ஹைதராபத்திற்கு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஹைதராபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறார். ஆனால் குணம் அடையாத காரணத்தால் அவர் ஹைதராபாத்தில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது" என்றார்.

    கண்காணிப்பில் உள்ளார்கள்

    கண்காணிப்பில் உள்ளார்கள்

    இதனிடையே கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் பி ஸ்ரீராமுலு திங்கள்கிழமை இரவு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதவில், "கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் பெங்களூரில் இருந்ததால், அவருடன் பணியாற்றிவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை சார்ந்தோர் என பெரும்பாலானோரின் உடல்நிலையை அறிந்து கொள்வதற்காக அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உடல்நிலை குறித்து கண்காணித்து வருகிறோம், அவர் தங்கியிருந்த வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்கள்" என்று என்றார்.

    டெல்லி நபருக்கு

    டெல்லி நபருக்கு

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர் இத்தாலியில் இருந்து வந்தவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள நாடுகளில் இத்தாலி உள்ளது. அரசுக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, பாதிக்கப்பட்ட பயணி டெல்லி விமான நிலையத்தில் கொரோனாவைரஸ்க்கான சோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. ஏனெனில் அவர் ஆஸ்திரியாவின் வியன்னாவிலிருந்து இருந்து வந்திருக்கிறார். அந்த நாடு பாதிக்கப்பட்ட நாடகாக அறிவிக்கப்படவில்லை என்பதால் சோதனை நடைபெறவில்லை.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இதையடுத்து ஏர் இந்தியா பிப்ரவரி 25ம் தேதி வியன்னாவில் இருந்து டெல்லிக்கு அவருடன் பயணம் செய்து வந்த குழுவினர், 14 நாட்கள் தங்கள் வீடுகளில் தனிமையில் இருக்குமாறு கேட்டு கொண்டதாக கூறப்படுகிது. ஆனால் அந்த விமானத்தில் பயணித்த . பயணிகளுக்கும் இதேபோன்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    இத்தாலி பயணி

    இத்தாலி பயணி

    ஜெய்ப்பூரில் ஒரு இத்தாலிய சுற்றுலாப் பயணி கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அவரது இரண்டு சோதனை முடிவுகளில் உள்ள மாறுபாடுகள் காரணமாக இறுதி உறுதிப்படுத்த அவரது மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    சிங்கப்பூர் போகாதீங்க

    சிங்கப்பூர் போகாதீங்க

    திங்களன்று உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஈரான், இத்தாலி, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மற்றும் இத்தாலியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    88000 பேருக்கு பாதிப்பு

    88000 பேருக்கு பாதிப்பு

    கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் ஆறு பேர் அண்மையில் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கொடிய வைரஸ் 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 88,000 க்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகையில், இந்த கொரோனா வைரஸ் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களைத் தாக்கும் என்றும், ஏற்கனவே மற்ற நோய்களால் பலவீனமடைந்துள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

    English summary
    a young software engineer who works in Bengaluru was tested positive for coronavirus in Hyderabad. that software engineer Travelled From Bengaluru To Hyderabad
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X