பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவிற்கு வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்று சோதனை ரிப்போர்ட்டை அளித்தால் அவர்கள் அரசின் தனிமை முகாமில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

Recommended Video

    தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்

    இந்தியா முழுக்க பெரு நகரங்களில் கடந்த திங்கள் கிழமை விமான சேவை தொடங்கியது. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்கி உள்ளது. இதற்கான டிக்கெட் விலையும், பல்வேறு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Coronavirus: Karnataka exempts people with Negative report from institutional quarantine

    விமானத்தில் இப்படி பிற மாநிலங்களுக்கு செல்லும் மக்களுக்கு பல்வேறு விதிமுறைகளை மாநில அரசுகள் விதித்து இருக்கிறது. கர்நாடகாவிற்கு விமானத்தில் தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் கண்டிப்பாக 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    7 நாள் அரசு முகாமில், 7 நாட்கள் வீட்டிலும் இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மற்றவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நிலையில் இந்த விதியில் தற்போது புதிய விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கர்நாடகாவிற்கு வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்று சோதனை ரிப்போர்ட்டை அளித்தால் அவர் அரசின் தனிமை முகாமில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

    தமிழகத்தில் ஒரே நாளில் திடீரென குறைந்த கொரோனா கேஸ்கள்.. எப்படி சாத்தியமானது.. இதுதான் பின்னணி!தமிழகத்தில் ஒரே நாளில் திடீரென குறைந்த கொரோனா கேஸ்கள்.. எப்படி சாத்தியமானது.. இதுதான் பின்னணி!

    அதாவது ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்த மருத்துவமனைகளில் சோதனை செய்துவிட்டு, தங்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்தால், அவர்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் கர்நாடகா வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த சோதனையை செய்து இருக்க வேண்டும்.

    இதனால் இவர்கள் யாரும் விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கான எச்சில் மாதிரி எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டியது இல்லை. அதேபோல் தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் அரசு முகாமில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஆனால் அதே சமயம் இவர்கள் நேரடியாக வீட்டிற்கு செல்லலாம். ஆனால் வீட்டில் இவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

    English summary
    Coronavirus: Karnataka exempts people from other states with Negative report from institutional quarantine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X