பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மொத்தம் 7178 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாதம் இறுதி வரை கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே இருந்தது. தினசரி கேஸ்கள் 2500-3000 என்ற ரீதியில் மட்டுமே வந்தது. ஆனால ஜூலை தொடக்கத்தில் இருந்து கேஸ்கள் வேகமாக அதிகரித்தது.

Coronavirus: Karnataka got 7178 infections in a single day, total cases raises to 172102

அதிலும் பெங்களூரில் தினசரி கேஸ்கள் 3000 வரை வர தொடங்கியது. இதையடுத்து பெங்களூரில் ஒரு வாரம் தீவிரமாக லாக்டவுன் போடப்பட்டது. ஆனால் லாக்டவுன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று அரசு அறிவித்தது.

அதோடு கடந்த 1ம் தேதி மொத்தமாக கர்நாடகாவில் லாக்டவுனை நீக்கி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இ பாஸ் தவிர வேறு எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது. தியேட்டர்கள் இயங்காது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை மட்டும் தொடர்ந்து வருகிறது.

உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை!உச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை!

இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7178 கேஸ்கள் வந்துள்ளது. இதுவரை வந்ததிலேயே இதுதான் அதிகபட்சம் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் மட்டும் இன்று 2665 கேஸ்கள் வந்துள்ளது. கர்நாடகாவில் இன்று மட்டும் 93 பேர் பலியாகி உள்ளனர்.

5006 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 172102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 79765 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இதுவரை 89238 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக் 3091 பேர் கர்நாடகாவில் பலியாகி உள்ளனர்.

English summary
Coronavirus: Karnataka got 7178 infections in a single day, total cases raises to 172102 so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X