பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையை விட மோசமான நிலை.. பெங்களூரில் ஜூலை 14 - 22 வரை முழு லாக்டவுன்.. எடியூரப்பா அதிரடி!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் 10 நாட்களுக்கு தீவிர லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. தீவிர கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமலுக்கு வர உள்ளது. பெங்களூரில் ஜூலை 14 - 22 வரை முழு லாக்டவுன் இருக்கும்.

பெங்களூரில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. மார்ச் மாதத்தில் பெங்களூரில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. ஜூன் இறுதி வரை பெங்களூரில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது.

அதிக மக்கள் தொகை இருந்தாலும் கொரோனா பாதிப்பு பெங்களூரில் குறைவாகவே இருந்தது. பெங்களூர் கொரோனாவை கட்டுப்படுத்தியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ஒரு மாதத்திற்கு பின் குட்நியூஸ்.. 7 நாட்களாக சென்னையில் நடக்கும் மாற்றம்.. பயன் தரும் அரசின் திட்டம்ஒரு மாதத்திற்கு பின் குட்நியூஸ்.. 7 நாட்களாக சென்னையில் நடக்கும் மாற்றம்.. பயன் தரும் அரசின் திட்டம்

நிலைமை மோசமானது

நிலைமை மோசமானது

ஆனால் பெங்களூரில் நிலைமை போக போக மோசமானது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து பெங்களூரில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து பெங்களூரில் சனி இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை லாக்டவுன் போடப்பட்டது. சாலைகளில் கட்டுப்பாடுகள் அதிகம் ஆனது. ஆனாலும் கேஸ்கள் குறையவில்லை.

தற்போது என்ன நிலைமை

தற்போது என்ன நிலைமை

தினமும் பெங்களூரில் 1000 + கேஸ்கள் வர தொடங்கியது. அதிலும் போக போக சென்னையை விட அதிக கேஸ்கள் பெங்களூரில் வர தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று 1185 கேஸ்கள் வந்துள்ள நிலையில் பெங்களூரில் 24 மணி நேரத்தில் 1533 கேஸ்கள் வந்துள்ளது. பெங்களூரில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 15329 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் லாக்டவுன்

மீண்டும் லாக்டவுன்

இந்த நிலையில் பெங்களூரில் இப்படி கேஸ்கள் அதிகரித்து வருவதால், பெங்களூரில் தீவிர லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. தீவிர கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமலுக்கு வர உள்ளது.ஜூலை 14 இரவு 8 மணி முதல் முதல் ஜூலை 22 அதிகாலை 5 மணி வரை பெங்களூரில் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே மக்களே வெளியே வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை ரோல்மாடல்

சென்னை ரோல்மாடல்

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போது இதேபோல் இரண்டு வாரம் தீவிர லாக்டவுன் போடப்பட்டது. சென்னையில் இதனால் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. தற்போது அதேபோல் சென்னையை பின்பற்றி பெங்களூரில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா அமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்த பின் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

English summary
Coronavirus: Lockdown will be imposed from July 14-23 in Bangalore announces CM .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X