பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி மாநாடு- பதுங்கியவர்களை சுட்டுக் கொன்னா தப்பு இல்லை- கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா

Google Oneindia Tamil News

பெங்களூரு: டெல்லி மத மாநாட்டுக்கு சென்றுவிட்டு கொரோனா பரிசோதனைக்கு வராமல் பதுங்கியவர்களை சுட்டுப் படுகொலை செய்தாலும் தவறு இல்லை என்று கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

Recommended Video

    இந்தியா 3வது ஸ்டேஜை எட்டிவிட்டதா? ஐசிஎம்ஆர் ரிப்போர்ட் சொல்வது என்ன?

    டெல்லி மதமாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களால் நாடு முழுவதும் கொரோனா பரவியது என்கிற கருத்து பரவியது. இதற்கு மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    Coronavirus: Not wrong to shoot hiding attendees of Delhi Event- Karnataka BJP MLA Renukacharya

    கொரோனா என்பது தொற்று நோய்; இதற்கு மதசாயம் பூசக் கூடாது என்பது அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள். கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவும் கூட, இதுபோல மதவெறுப்பை தூண்டும் கருத்துகளைப் பேசக் கூடாது என எச்சரித்திருந்தார்.

    எடியூரப்பாவின் எச்சரிக்கை வெளியான 24 மணி நேரத்துக்குள்ளேயே கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் பரிசோதனைக்கு வர வேண்டும்; அதனை செய்யாமல் பதுங்கியவர்களை கண்டுபிடித்து சுட்டுக் கொல்லலாம். தவறு ஏதும் இல்லை.

    அப்படி செய்யாமல் விட்டுவிட்டால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி விடும். சைனாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று தாக்கியதால்தான் அனைவருக்கும் பரவியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் ரேணுகாச்சார்யா.

    இதேபோல் பாஜக மாநில பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அரவிந்த் லிம்பாவலி, டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு சோதனைக்கு வர முடியாது என்பவர்களின் நோக்கம்தான் என்ன? கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் எண்ணமா? அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த நினைக்கிறார்களா? என ஆவேசமாக கூறினார்.

    செக்ஸ் புகாரில் சிக்கிய ரேணுகாச்சார்யா

    கர்நாடகாவில் அமைச்சராக பதவி வகித்தவர் ரேணுகாச்சார்யா. 2007-ல் ரேணுகாச்சார்யா மீது நர்ஸ் ஜெயலட்சுமி என்பவர் பலாத்கார புகாரை தெரிவித்திருந்தார். 2012-ல் ரேணுகாச்சார்யா அமைச்சரான போதும் மீண்டும் இதே புகாரை கிளப்பினார் நர்ஸ் ஜெயலட்சுமி.

    மேலும் ரேணுகாச்சார்யா தம்முடன் அந்தரங்கமாக இருந்த புகைப்படங்களையும் நர்ஸ் ஜெயலட்சுமி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். கர்நாடகாவின் சர்ச்சைக்குரிய பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் படுதீவிரமான ஆதரவாளர்தான் இந்த ரேணுகாச்சார்யா.

    English summary
    Karnataka BJP MLA Renukacharya said that those who attended Delhi Event and have not come out for treatment and it is not wrong to shoot them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X