பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பலநூறு பேர் கூடினார்கள்.. கொரோனாவிற்கு இடையே கர்நாடகாவில் நடந்த வினோத திருவிழா.. அதிர்ச்சி வீடியோ!

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பிற்கு இடையே அங்கிருந்து ஹவேரி மாவட்டத்தில் உள்ள கர்ஜாகி கிராமத்தில் நடந்த திருவிழா ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு 6,516 பேருக்கு மொத்தமாக கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 275 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Coronavirus: People gathered in large in Karnataka village function

இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பிற்கு இடையே அங்கிருந்து ஹவேரி மாவட்டத்தில் உள்ள கர்ஜாகி கிராமத்தில் நடந்த திருவிழா ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இருக்கும் ஸ்ரீ பிரம்மாலீகேஸ்வரா கோவில் ஒன்றில் இந்த திருவிழா நடந்துள்ளது.

கடந்த ஜூன் 9-11 தேதிகள் விழா நடந்துள்ளது. ''கார ஹன்னிமே'' எனப்படும் பௌர்ணமி நாளை கொடடும் விழா ஆகும் இது. வெயில் காலத்தின் கடைசி பௌணர்மியை இப்படி அங்கு கொண்டாடுவார்கள். மழை காலத்தை வரவேற்கும் வகையில் விழாவை இவர்கள் கொண்டாடுவார்கள்.

இந்த விழாவில் நேற்று பல நூறு பேர் கூட்டமாக கலந்து கொண்டு உள்ளனர். பெரிய மாட்டு வண்டியில் அங்கு விழா குழுவினர் வேகமாக செல்வதுதான் விழாவின் முக்கிய நிகழ்வு ஆகும். இதை பார்க்க அங்கு அலை கடலாக மக்கள் திரண்டு இருந்தனர். கொஞ்சம் கூட சமூக இடைவெளி இல்லாமல் சிறிய இடத்தில் பலநூறு பேர் திரண்டு இருந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த 4 இடங்கள்.. மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்திய இந்திய - சீன ராணுவ அதிகாரிகள்.. என்ன நடந்தது?அந்த 4 இடங்கள்.. மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்திய இந்திய - சீன ராணுவ அதிகாரிகள்.. என்ன நடந்தது?

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பிரதாயத்திற்கு விழாவை நடத்துகிறோம், மக்கள் வர மாட்டார்கள் என்று குறித்தான் விழாவிற்கு கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.

ஆனால் அதையும் மீறி இந்த விழாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டது அதிர்ச்சி அளித்துள்ளது.

English summary
Coronavirus: People gathered in large in Karnataka village function without social distance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X