பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்னாப்பிரிக்க பயணி எப்படி வந்தார்? பெங்களூரில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட அந்த நொடி- நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கடைசியில் பயந்தபடியே இந்தியாவிலும் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவை விட தீவிரமானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஓமிக்ரான் பெங்களூரில் இரண்டு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.

Recommended Video

    Bangalore Omicron நோயாளிகளிடம் இருக்கும் அந்த ஒற்றுமை | Oneindia Tamil

    பெங்களூரில் ஒரு மருத்துவர் இன்னொரு தென்னாப்பிரிக்க பயணி ஆகியோரிடம் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுக்க 30 நாடுகளில் அதிகாரபூர்வமாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இப்படிப்பட்ட நேரத்தில்தான் பெங்களூரில் இரண்டு ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று பெங்களூரில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது எப்படி, நேற்று ஓமிக்ரான் உறுதி செய்யயப்பட்ட பின் அதிகாரிகள் செய்தது என்ன என்று இந்த செய்தியில் பார்க்கலாம்..

    பெரும் பயம், குழப்பம்.. பெங்களூர் டாக்டருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி? லோக்கல் பரவல் தொடங்கிவிட்டதா? பெரும் பயம், குழப்பம்.. பெங்களூர் டாக்டருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி? லோக்கல் பரவல் தொடங்கிவிட்டதா?

    முதல் கேஸ்

    முதல் கேஸ்

    இதில் முதல் கேஸ் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த பயணி காரணமாக ஏற்பட்டது ஆகும். இவருக்கு கேஸ் வந்ததே கொஞ்சம் விசித்திரமானதுதான். ஏனென்றால் ஓமிக்ரான் பரவலுக்கு முன்பாகவே இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு வேக்சின் கட்டாயம் என்று விதி கொண்டு வரப்பட்டுவிட்டது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த அந்த பயணிக்கு 2 டோஸ் போடப்பட்ட சான்றிதழ் இருந்துள்ளது.

    துபாய் வழி பயணம்

    துபாய் வழி பயணம்

    இவர் துபாய் வழியாக இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்துள்ளார். கடந்த 20ம் தேதி அந்த 66 வயது கொண்ட தென்னாபிரிக்கா பயணி பெங்களூரில் தரையிறங்கி இருக்கிறார். அவரிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்துள்ளது. இதனால் பெங்களூருக்குள் அனுமதிக்கப்பட்டவரின் ஹோட்டல் விலாசம் வாங்கப்பட்டுள்ளது. இவரின் மாதிரிகள் ஏர்போர்ட்டிலேயே வாங்கப்பட்டுள்ளது.

    முடிவு

    முடிவு

    அன்று இரவே அந்த தென்னாப்பிரிக்க பயணியின் கொரோனா சோதனை முடிவுகள் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ஆனால் அவர் அறிகுறி இல்லாத நோயாளி என்பதால் அதே ஹோட்டலில் தனிமைப்படுத்தும்படி பெங்களூர் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக அவர் அங்கேயே இருந்துள்ளார். இதில் 22ம் தேதி தனியார் டெஸ்ட் மையத்தில் அவர் சோதனை செய்து 23ம் தேதி நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது.

    ரிசல்ட்

    ரிசல்ட்

    இதை மாநகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்து தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறியவர் மறுநாளே துபாய் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் இவரின் கொரோனா மாதிரியை ஜீன் சோதனைக்கு அனுப்பிய நிலையில் அதன் முடிவு நேற்று வந்தது. அதில்தான் இவருக்கு ஓமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 3 கேள்விகள்தான் அதிகாரிகளை குழப்பி உள்ளது. இவர் துபாயில் இருந்து வரும் போது நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தது எப்படி? அது பொய்யான சான்றிதழா? இல்லை துபாய் சோதனையில் இவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்படவில்லையா?

    திரும்பி

    திரும்பி

    அதோடு 20ம் தேதி பாசிட்டிவ் என்று வந்தவருக்கு, 23ம் தேதியே நெகட்டிவ் என்று வந்தது எப்படிடி? தனியார் நிறுவனத்தில் மீண்டும் சோதனை செய்ததில் ஓமிக்ரான் கண்டறியப்படவில்லையா? அப்படி என்றால் சமயங்களில் டெஸ்டில் இருந்து ஓமிக்ரான் எஸ்கேப் ஆகிறதா? ஆகிய 3 கேள்விகள் எழுந்துள்ளன. இவர் ஓமிக்ரான் கொரோனாவை வைத்துக்கொண்டு அதிகாரிகளை ஏமாற்றி இருக்கிறாரா என்ற அச்சமும் எழுந்துள்ளது. இருப்பினும் இவர் இப்போது துபாய் சென்றுவிட்டதால் இனி துபாய் அதிகாரிகள்தான் இவரை கண்காணிக்க வேண்டும்.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    இன்னொரு பக்கம் நவம்பர் 22ம் தேதி பெங்களூரில் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பாசிட்டிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இவருக்கு ஓமிக்ரான் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த இரண்டு செய்திகளை கேட்டதும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பரபரத்தனர். கொரோனா கட்டுப்பாட்டு "எஸ்ஓபி' விதிப்படி புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டால் உடனே நோயாளியை தனிமைப்படுத்த வேண்டும்.

    தனிமை

    தனிமை

    அதன்படியே அந்த பெங்களூர் மருத்துவரை தனிமைப்படுத்தி உள்ளனர். இரண்டாவது விதிப்படி ஒரு கொரோனா நோயாளியின் அனைத்து காண்டாக்ட்களையும் கண்டுபிடிக்க வேண்டும். முதல் நிலை காண்டாக்ட்களை டிரேஸ் செய்து டெஸ்ட் செய்ய வேண்டும். இரண்டாம் நிலை காண்டாக்ட்களை டிரேஸ் செய்து தனிமைப்படுத்த வேண்டும். அதன்படியே பெங்களூர் டாக்டருக்கு 13 முதல் நிலை காண்டாக்ட், 205 இரண்டாம் நிலை காண்டாக்ட் இருந்துள்ளனர்.

    சோதனை

    சோதனை

    விறுவிறுப்பாக செயல்பட்ட அதிகாரிகள் இவர்களை கண்டுபிடித்து 13 முதல் நிலை காண்டாக்ட்களை சோதனை செய்துள்ளனர். அதில் 3 பேருக்கு கொரோனா இருந்துள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக ஜீன் சோதனை செய்யப்படும். பெங்களூர் டாக்டர் பலரை சந்தித்து இருக்கலாம் என்பதால் காண்டாக்ட் டிரேசிங் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இவருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

    தென்னாப்பிரிக்க பயணி

    தென்னாப்பிரிக்க பயணி

    இன்னொரு பக்கம் துபாய்க்கு திரும்பி சென்ற தென்னாப்பிரிக்க பயணிக்கு 24 முதல் நிலை காண்டாக்ட் இருந்துள்ளனர். 240 இரண்டாம் நிலை காண்டாக்ட் இருந்துள்ளனர். இதில் எல்லோருக்கும் அவசர அவசரமாக டெஸ்ட் செய்யப்பட்டது. எல்லோருக்கும் நெகட்டிவ் என்று வந்துள்ளது. ஆனாலும் 264 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்னர். இன்னும் அங்கு தொடர்ந்து காண்டாக்ட் டிரேசிங் நடத்தப்பட்டு வருகிறது.

    English summary
    Coronavirus: The moment officials found the Omicron variant in Bangalore - What happened for real yesterday?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X