பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னங்க இது? பெங்களூர் ஓமிக்ரான் நோயாளிகளிடம் இருக்கும் அந்த ஒற்றுமை- இனிதான் கவனமாக இருக்க வேண்டும்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் ஓமிக்ரான் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்குமே முக்கியமான ஒற்றுமை ஒன்று உள்ளது.

Recommended Video

    Bangalore Omicron நோயாளிகளிடம் இருக்கும் அந்த ஒற்றுமை | Oneindia Tamil

    இந்தியாவில் முதல் முறையாக நேற்று இரண்டு பேருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஓமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேருமே கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள்.

    இதில் ஒருவர் தென்னாப்பிரிக்க பயணி. அவர் இப்போது இந்தியாவில் இல்லை, துபாயில் இருக்கிறார். இன்னொருவர் பெங்களூரை சேர்ந்த டாக்டர்.

    தமிழகத்தில் ஓமிக்ரான் பரவவில்லை.. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் - மா.சுப்ரமணியன் தமிழகத்தில் ஓமிக்ரான் பரவவில்லை.. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் - மா.சுப்ரமணியன்

    ஓமிக்ரான்

    ஓமிக்ரான்

    இந்த நிலையில் பெங்களூரில் ஓமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேருமே வேக்சின் போட்டவர்கள் என்று உறுதியாகி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய் மூலம் இந்தியா வந்த அந்த பயணிக்கு 66 வயதாகி உள்ளது. அவர் இரண்டு டோஸ் வேக்சின் போடாமல் பயணமே மேற்கொண்டு இருக்க முடியாது. வேக்சின் போட்டவர்கள் மட்டுமே சர்வதேச பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பதால் அவர் வேக்சின் போட்டது உறுதியாகி உள்ளது.

    பெங்களூர் வேக்சின்

    பெங்களூர் வேக்சின்

    அதேபோல் பெங்களூரில் ஓமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்ட டாக்டரும் கூட இரண்டு டோஸ் வேக்சின் போட்டுள்ளார். முன்கள பணியாளர் என்பதால் இவருக்கு வேக்சின் முன்பே போடப்பட்டுவிட்டது. அதோடு மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவர் மாஸ்க் அணிந்து, கிளவுஸ் அணிந்து பாதுகாப்பாகவே இருந்து இருக்கிறார். இருப்பினும் அவருக்கு கொரோனா வந்து இருக்கிறது.

    பாதிப்பு உறுதி

    பாதிப்பு உறுதி

    இதன் மூலம் இரண்டு டோஸ் வேக்சின் போட்டவர்களுக்கும் ஓமிக்ரான் பரவுவது உறுதியாகி உள்ளது. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் தொடக்க நாட்களில் ஓமிக்ரான் பரவிய போது வேக்சின் போடாவதர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். வேக்சின் போடாதவர்கள் 40 சதவிகிதத்திற்கும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

    ஆனால் மாற்றம்

    ஆனால் மாற்றம்

    தென்னாப்பிரிக்காவில் வேக்சின் குறைவாக போடப்பட்ட காரணத்தினாலேயே அதிக அளவில் கேஸ்கள் பதிவானதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது இரண்டு டோஸ் வேக்சின் போட்டவர்களையும் ஓமிக்ரான் தாக்கி உள்ளது. இதன் காரணமாக மக்கள் இனிதான் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வேக்சின் போட்டாலும் ஓமிக்ரான் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன.

    ஓமிக்ரான் அச்சம்

    ஓமிக்ரான் அச்சம்

    எப்படி இருந்தாலும், எந்த வகை கொரோனாவாக இருந்தாலும் வேக்சின் 100 சதவிகித பாதுகாப்பை தராது. மருத்துவமனையில் சேருவதை மட்டுமே வேக்சின் தடுக்கும். இதன் காரணமாக வேக்சின் போட்டபின்பும் மக்கள் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி விடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: The similarity between two Omicron variant cases in Bangalore yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X