பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக தொடங்கப்பட்ட நாளை தேசமுமே கொண்டாட நிர்பந்திக்கிறார் பிரதமர் மோடி: குமாரசாமி பாய்ச்சல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: பாஜக தொடங்கப்பட்ட நாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டா வேண்டும் என்பதற்காகவே இன்று இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி விளக்கேற்ற அறிவுறுத்தியிருக்கிறார் என கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கடுமையாக சாடியுள்ளார்.

Recommended Video

    மோடி ஏப்ரல் 5 தேர்வு செய்தது ஏன்?

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட் அல்லது அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    Coronvirus: Kumaraswamy asks PM Modi to explain 9 pm event

    மின்சார வாரியத்தினரும் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைப்பதால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் ரீதியாகவும் பிரதமர் மோடியின் வேண்டுகோள் சர்ச்சையாகி உள்ளது.

    இது தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பாஜக தொடங்கப்பட்ட நாளை கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இரவு 9 மணிக்கு விளக்கை ஏற்ற சொன்னாரா பிரதமர் மோடி? எதற்காக ஏப்ரல் 5-ந் தேதி இரவு 9 மணியை பிரதமர் மோடி தேர்வு செய்தார்?

    கொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்கு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு! கொரோனா விழிப்புணர்வு.. இன்று இரவு 9 மணிக்கு.. 9 நிமிடம் விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி அழைப்பு!

    இது தொடர்பாக பிரதமர் மோடி முறையாக விளக்கம் அளிக்க வேண்டும்? இதுகுறித்து பிரதமர் மோடி அறிவியல்பூர்வமாக விளக்கம் தர வேண்டும். இவ்வாறு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Former Karnataka Chief Minister Kumaraswamy has asked PM Modi’s light a lamp campaign for today at 9 pm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X