பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இருமல், தும்மலின் போது வரும் நீர் துளிகள்.. கொரோனா அச்சத்தை அதிகரித்த புதிய ஆய்வு.. ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: இருமல் அல்லது தும்மலிலிருந்து வரும் சுவாச நீர் துளிகள் வெகுதூரம் பயணிக்கின்றன. அவை வெப்பமான, வறண்ட இடங்களைவிட ஈரப்பதமான, குளிர்ந்த காலநிலையில் அதிக நேரம் மிதப்பது ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.. இந்த புதிய ஆய்வு கொரோனா தொற்று நோய் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் சான் டியாகோ (யு.சி.எஸ்.டி) இந்திய அறிவியல் நிறுவனம் (பெங்களூரு) மற்றும் டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு Physics of Fluids இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு எவ்வளவு முக்கியமானது?

கோவிட் -19 உள்ளிட்ட சுவாச வைரஸ்கள் ஆரம்பத்தில் பரவுவதையும், அந்த பரவலில் சுவாச துளிகளின் பங்கையும் கணிக்க ஒரு புதிய கணித மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கிறார்கள். மக்கள்தொகை அளவிலான தொடர்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வை பார்த்தால் தொற்றுநோய் பரவ காரணமாக இருக்கிறது. இந்த ஆய்வில் சுவாசத்தில் இருந்து வெளியாகும் நீர் துளிகள் எவ்வளவு தூரம் மற்றும் வேகமாக பரவுகிறது, அவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி 50% இந்தியாவுக்கு தான்.. காசு கொடுத்தும் வாங்க வேண்டியதில்லை.. சீரம் சிஇஒ சூப்பர்! கொரோனா தடுப்பூசி 50% இந்தியாவுக்கு தான்.. காசு கொடுத்தும் வாங்க வேண்டியதில்லை.. சீரம் சிஇஒ சூப்பர்!

பரவும் விதம்

பரவும் விதம்

வானிலையைப் பொறுத்து, சில சுவாச துளிகள் ஆவியாகும் முன் அவற்றின் மூலத்திலிருந்து 8 அடி முதல் 13 அடி வரை பயணிக்கின்றன. 35 ° C மற்றும் 40% ஈரப்பதத்தில், ஒரு துளி 8 அடி பயணம் செய்யலாம். இருப்பினும், 41 ° F மற்றும் 80% ஈரப்பதத்தில், ஒரு துளி 12 அடி வரை பயணிக்க முடியும். இவை அனைத்தும் காற்றின் வேகத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டவை அல்ல.

ஆறு அடி தூரம் எல்லாம் வேஸ்ட்

ஆறு அடி தூரம் எல்லாம் வேஸ்ட்

இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருப்பது என்னவென்றால் முகமூடிகள் இல்லாமல், கொரோனா தொற்றுநோயைத் தடுக்க ஆறு அடி தூரம் தள்ளி நிற்கும் சமூக விலகங்கள் போதுமானதாக இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

குளிர்காலம்

குளிர்காலம்

குளிர்காலத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?

சுவாசத்தில் இருந்து வரும் நீர்துளிகளின் ஆயுட்காலம் என்பது வெப்பநிலையை விட காற்றில் உள்ள ஈரப்பதத்தைப் பொறுத்தது தான் என்ற இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானி பாசு கூறினார். அதாவது தெளிவாக சொல்வது என்றால் அதிக ஈரப்பதத்தில் (ஈரப்பதம்) இது நீண்ட காலம் உயிர்வாழும், எனவேதான் ஆவியாகும் முன் அல்லது யாரிடமாவது பரவும் முன்பு நீண்ட தூரம் பயணிக்கிறது. குளிர்ந்த வெப்பநிலை அதன் ஆயுளை நீட்டிக்கிறது, ஆனால் ஈரப்பதமான சூழலை ஒப்பிடும் போது குறைவுதான் "என்றார்.

எடைகள் எப்படி

எடைகள் எப்படி

வேறு சொல்லிக்கொள்ளும்படியான கண்டுபிடிப்புகள் உள்ளனவா?

அதிக ஆபத்தை ஏற்படுத்தும் நீர்த்துளிகளின் எடை, அவை எப்படி பயணிக்கும், எப்போது ஆவியாகும் என்பதை குறித்து இந்த ஆய்வு சிலதகவல்களை தருகிறது. 14-48 மைக்ரான் வரம்பில் உள்ள நீர்த்துளிகள் ஆவியாகி அதிக தூரம் பயணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.. சிறிய துளிகள் ஒரு நொடிக்குள் ஆவியாகின்றன, அதே நேரத்தில் 100 மைக்ரான்களுக்கும் அதிகமான நீர்த்துளிகள் விரைவாக தரைக்கு சென்றுவிடுகின்றன. முகமூடிகளை அணிந்தாலும் சுவாச நீர்துகள்கள் அதில் சிக்க வாய்ப்பு உள்ளது.

Recommended Video

    N95 mask கொரோனா வைரஸை தடுப்பதில்லை - மத்திய அரசு

    English summary
    Cough droplets travel longer when it’s cold & humid–new Covid mode, the life of a droplet depends more on humidity than on temperature.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X