பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதி மாறி கல்யாணம்.. 4 வருடம் கழித்து ரிட்டர்ன்.. கல்லால் அடித்து கொன்ற கிராமம்.. பரிதாப சம்பவம்

குடகு அருகே தம்பதி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: சாதி மாறி கல்யாணம் செய்து கொண்டனர்.. 4 வருடம் கழித்து நம்பி ஊருக்குள் காலடி எடுத்து வைத்த தம்பதியை கல்லாலேயே அடித்து கொன்றுள்ளனர் கிராம மக்கள்!

கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் லக்காலாகட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் ரமேஷ் மாதர். இவர் அதே ஊரை சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணை காதலித்தார். ஆனால் ரமேஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர். அதனால் காதல் விவகாரத்தை கண்டு கங்கம்மா வீட்டில் கொதித்து போய்விட்டனர்.

couple stoned to death for inter caste marriage

இதனால் காதலர்கள் அந்த ஊரில் இருக்கும்வரை கல்யாணம் செய்ய முடியாது என்று முடிவெடுத்து, 2015-ல் வீட்டை மீறி கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டனர். இந்த 4 வருடங்களாக இருவரும் தலைமறைவாகவே வாழ்ந்து கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகளும் பிறந்தன.

காதை துளைத்த மெஷின் சத்தம்.. பேரன் விழுந்தது தெரியாத தாத்தா.. தண்ணீர் தொட்டியில் மிதந்த உடல்!காதை துளைத்த மெஷின் சத்தம்.. பேரன் விழுந்தது தெரியாத தாத்தா.. தண்ணீர் தொட்டியில் மிதந்த உடல்!

இந்நிலையில், நேற்று முன்தினம் 2 பேருக்கும் சொந்த ஊருக்கு போகலாம் என்று ஆசை வந்தது. பழையதை மறந்து இருப்பார்கள், குழந்தைகளை கண்டால் எல்லா கோபமும் பறந்துபோய்விடும் என்று நம்பி சொந்த ஊருக்கு வந்தனர். ஆனால், ஊருக்குள் நுழையும்போதே, இவர்களை பார்த்த ஊர்மக்கள் ஆவேசமானார்கள்.

ஓடிப்போய் கீழே கிடந்த கற்களை கொண்டு அவர்களை சரமாரியாக தாக்கினர். பெரிய பெரிய கற்களை ஈவிரக்கமே இல்லாமல் தூக்கி போட்டதில், இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
couple killed by village people for inter caste marriage in kudagu near karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X