பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பயம்.. ஏசி இல்லை.. காணாமல் போன நவீனங்கள்.. பழைய காலத்துக்கு மாறிய அலுவலகங்கள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கொரோனாவால் இந்தியாவில் ஒயிட் காலர் ஜாப்பில் உள்ள ஊழியர்கள், இனி குளிரூட்டப்படாத அல்லது ஏர் கண்டிஷனிங் இல்லாமல் அலுவலகங்களில் பணியாற்ற போகிறார்கள். இயற்கையான காற்றை வாங்க நிறுவனங்கள் போராடிக் கொண்டிருகின்றன.

Recommended Video

    அந்த ஒரு ஏசி தான் கொரோனாவை பரப்பும்.. தப்புவது எப்படி? டிப்ஸ்

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் கொரானா பரவும் என்ற பயம், சட்டையின் காலரில் கூடாத அழுக்குப்படாமல் வேலை செய்யும் வெள்ளை காலர் ஜாப் ஊழியர்கள் மத்தியில் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கோடைகாலத்தில் வெயில் உச்சகட்டமாக இருந்தாலும், ஏராளமான நிறுவனங்கள் ஏசி போடுவதை நிறுத்திவிட்டன. ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு, டேபிள் பேனை வைத்து கொண்டு வேலை செய்ய அனுமதிக்கின்றன.

    நற்செய்தி.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புநற்செய்தி.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    பேன் தான் பாதுகாப்பு

    பேன் தான் பாதுகாப்பு

    ஒரு நாள் முழுவதும் மின்சாரமே இல்லை என்றாலும் முழுமையாக ஏர் கண்டிஷன் செயல்படும் அளவுக்கு ஜெனரேட்டர் வசதி, பேட்டரி வசதி கொண்டு செயல்படும் அலுவலகங்களில் மின்விசிறி (பேன்) வசதிகள் என்பது கிடையாது. தற்போது கொரோனாவால் புதிய பாதுகாப்பு அம்சம்கள் பேன்களை மாற்றி வாங்கி குவித்து வருகின்றன.

    மாறிய நிறுவனங்கள்

    மாறிய நிறுவனங்கள்

    மைத்ரா, வேர்ல்பூல், என்டிபிசி, பானாசோனிக் லைஃப் சொல்யூஷன்ஸ், ஆல்ஸ்டோம், வேக்ஃபிட்.கோ, இன்ஸ்டாமோஜோ, ஹோம்லேன் மற்றும் குயிக்ரைடு ஆகிய நிறுவனங்கள் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளன. ஃப்ரெஷ்மேனு மற்றும் கேஷ்ஃப்ரீ போன்ற சில நிறுவனங்கள் மிகக் குறுகிய காலத்திற்கு ஏ.சி.க்களை இயக்குகிறார்கள். நெஸ்லே, மோட்டிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் மற்றும் ஆர்பிஜி குழு ஆகியவை கொரோனாவை தடுக்க புதிய பாதுகாப்பு அம்சங்களை நிறுவியுள்ளன. வேறு ஒன்றும் இல்லை பேன் தான் பாதுகாப்பு அம்சம். அத்தோடு ஏசி இல்லாமல் இயற்கையாக காற்று வர புதிய வழிகளை உருவாக்கி வருகின்றன.

    மின் விசிறிகள் அதிகரிப்பு

    மின் விசிறிகள் அதிகரிப்பு

    மைத்ரா நிறுவனங்கள் ஊழியர்களை மின் விசிறிகளை நிறுவியுள்ளது. பெங்களூரை தளமாகக் கொண்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இப்போது ஏசி இல்லை, ஆனால் நிறைய பேன்கள் உள்ளன. ஜன்னலை திறந்து வைத்து கொண்டுகாற்றோட்டமாக வேலை செய்கின்றன. . பானாசோனிக் லைஃப் சொல்யூஷன்ஸ் ஏர் கூலர் மற்றும் மின் விசிறிகளை பயன்படுத்துகிறது. என்டிபிசி தனது அலுவலகங்களில் உள்ள அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைத்துள்ளது.

    ஈரப்பதம் 40முதல் 70 சதவீதம்

    ஈரப்பதம் 40முதல் 70 சதவீதம்

    பல அலுவலகங்கள் கொரோனா பிரச்சனை காரணமாக காற்றுச்சீரமைத்தல் முறைகளைப் பயன்படுத்துவது தொடர்பான மத்திய பொதுப்பணித் துறை (சிபிடபிள்யூடி) வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன. இந்த வழிகாட்டுதல்களின்படி வெப்பநிலை, ஈரப்பதம், புதிய காற்று வருவது போன்றவை குறிப்பிடுகின்றன. வெப்பநிலை அமைப்புகள் 24-30 டிகிரி வரம்பில் பரிந்துரைக்கப்படுகின்றன, மேலும் ஈரப்பதம் 40-70% ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல காற்றோட்டமான வசதியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    காற்று வசதிக்காக முயற்சி

    காற்று வசதிக்காக முயற்சி

    ஊழியர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய நிறுவனங்களும் கூடுதல் கவனம் செலுத்துகின்றன நெஸ்லே, மோட்டிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் டி.எல்.எஃப், கேபிடா-லேண்ட், பாரதி ரியால்டி போன்ற நிறுவனங்கள் காற்றை கொண்டுவர தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளன.இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வருகின்றன. மிகவும் தீவிரமான முயற்சிகள் வந்துள்ளன, கொரோனாவால் காற்றை வாங்க தீவிர முயற்சி செய்கின்றன. நவீன வசதிகள் எல்லாம் கொரோனாவால் மாயமாகி உள்ளன.பழைய படி பேனுக்கு கீழ் எவ்வளவு பெரிய அதிகாரிகளும் வேலை செய்யும் நிலையை உருவாக்கி உள்ளது கொரோனா.

    English summary
    many companies to opt for non-AC workspaces or invest in safer systems due to Fear of corona infection in bengalore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X