பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபனி புயலால் பெங்களூர் வரை மழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபனி புயல் ஆந்திரா போனதிலும் ஒரு நல்லது இருக்கு

    பெங்களூர்: ஃபனி புயலால் பெங்களூரிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கே இன்னும் மழை வரவில்லை, அதற்குள் பெங்களூருக்கா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், சொன்னது வானிலை ஆய்வு மையமாச்சே.

    ஃபனி புயல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் எங்குமே கரையை கடக்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வட தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால், தென் கர்நாடகாவில், தலைநகர் பெங்களூர் உட்பட பல பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Cyclone Fani impact: Bengaluru may receive rain for the next few days

    ஃபனி புயல் தாக்கத்தால், கேரளாவில் இன்று முதலே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெங்களூரில் இன்று வழக்கம்போல கோடை வெப்பம் சுட்டெரித்தது. இரவு வேளைகளில் கடுமையான புழுக்கத்தை மக்கள் உணர முடிந்தது. ஒரு சில நேரங்களில் மேக மூட்டம் இருந்தது.

    சென்னையில் வெகுவாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம்.. 900 அடி வரை தோண்டினால் தான் தண்ணீர் சென்னையில் வெகுவாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம்.. 900 அடி வரை தோண்டினால் தான் தண்ணீர்

    வித்தியாசமான வானிலையால் பெங்களூர் மக்கள் சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். குழப்பத்தில் உள்ளனர். எல்லாம் ஃபனி புயல் செய்யும் மாயம்தான் என்கிறது வானிலை துறை.

    English summary
    Cyclone Fani is likely to intensify into a ‘severe cyclonic storm’ in the next 12 hours and several parts of interior Karnataka, including Bengaluru, and isolated places in coastal Karnataka, receive rain or thundershowers over the next few days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X