பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபனி புயல் தாக்கம்.. தமிழகத்தையெல்லாம் தாண்டிச் சென்று பெங்களூரில் கொட்டித் தீர்த்த மழை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபனி புயல் ஆந்திரா போனதிலும் ஒரு நல்லது இருக்கு

    பெங்களூர்: ஃபனிப் புயலின் தாக்கத்தின் காரணமாக, பெங்களூரில் இன்று பிற்பகல் முதல் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனிப் புயலின் தாக்கத்தால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், புயல் பாதை மாறி ஒடிசா நோக்கி செல்கிறது.

    Cyclone Fani impact: Rain lashes Bangalore since evening

    எனவே தமிழகத்தின், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை, வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது. இதனிடையே சென்னையில் இன்று வெயில் வாட்டி வரும் நிலையில், புயலின் தாக்கத்தால் பெங்களூரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்குமேல், திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு மழை கொட்டத் தொடங்கியது.

    கடுமையான காற்றுடன், இடிமுழக்கம், மின்னல் தென்பட்டது. மழை காலங்களில் பெய்யும் மழை போல சரசரவென பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோரமங்களா, டெய்ரி சர்க்கிள், மடிவாளா, பேகூர் ரோடு, பன்னேர்கட்டா ரோடு உள்ளிட்ட தெற்கு பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மழையின் தாக்கம் இருந்தது. கடுமையான வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பெங்களூர் நகரவாசிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    English summary
    Rain lashes Bangalore since Tuesday evening as cyclone Fani gives its impact.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X