பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள்.. 10 ஆயிரம் மாஸ்க்குகள்.. எங்கேன்னு பாருங்க.. அசந்துபோன மக்கள்

பெங்களூருவில் சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் மாஸ்க்குகள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதமாகவே கர்நாடகத்தில் தொற்று நிலைமை மிக மோசமாக இருந்தது.. எங்களை மீறி நிலைமை சென்றுவிட்டது என்று அம்மாநில முதல்வரே அன்று கலங்கிப்போய் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஷாக்..! மும்பை மருத்துவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா.. வேக்சின் போட்ட பிறகு இரு முறை பாதிப்புஷாக்..! மும்பை மருத்துவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா.. வேக்சின் போட்ட பிறகு இரு முறை பாதிப்பு

தென்மாநிலங்களிலேயே அதிக அளவு பாதிப்பை தந்தது கர்நாடகத்தில்தான்.. இதற்கு பிறகு எத்தனையோ கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போடப்பட்டு, ஓரளவு தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

 ஆபத்து

ஆபத்து

ஆனால், அதற்குள் 3-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக டாக்டர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகின்றனர்.. இதனால் மக்கள் கலக்கத்திலும் ஆதங்கத்திலும் உள்ளனர்.. அந்த பாதிப்பு வருவதற்கு முன்னமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடித்து வருகிறார்கள்...

 பயம் - கலக்கம்

பயம் - கலக்கம்

ஆனாலும் பயம் குறையவில்லை.. இந்நிலையில், பெங்களூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி இந்த வழிபாடு நடந்துள்ளது..

 அலங்காரம்

அலங்காரம்

அதற்காக சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் மாஸ்க்குகள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.. சிறப்பான பூஜைகளும் அடுத்தடுத்து நடந்தது.

 பக்தர்கள்

பக்தர்கள்

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டனர்... இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் சொல்லும்போது, "கடந்த 4 தினங்களாக சாய்பாபாவுக்கு இந்த விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் வேண்டி இந்த சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடத்தப்பட்டது. இதில் தேஜஸ்வி சூர்யா எம்பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்" என்றனர்.

English summary
Sai Baba has been decorated with 3 lakh pills and 10 thousand face masks in Karnataka. The worship was held at the Sai Baba Temple in JP Nagar, Bangalore to free the people from the corona and prevent the formation of the 3rd wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X