பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலாவுக்காக 10 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா. தனக்கு விதிக்கப்பட்ட 10.10 கோடிக்கான அபராதத்தை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தினார்.

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு முதல் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Details of those who took the bank draft for 10 crore and 10 lakh rupees for Sasikala

சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு 10.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை கட்டத்தவறினால் மேலும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சசிகலா சார்பில் ரூ. 10 கோடிக்கான அபராத தொகை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. நீதிபதி சிவப்பாவிடம் நேற்று (நவம்பர் 15) மாலை வக்கீல் சி.முத்துகுமார் வழங்கினார். அவருடன் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் உடனிருந்தார். இவ்வார இறுதி அல்லது அடுத்த வாரம் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை செலுத்தப்படும் என்று தெரிகிறது.

ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்திய சசிகலா, சுதாகரன் - விரைவில் விடுதலை ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்திய சசிகலா, சுதாகரன் - விரைவில் விடுதலை

சசிகலாவுக்காக 10 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் பின் வருமாறு: பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் ரூ.3.25 கோடி வரைவோலை எடுத்துள்ளார். வசந்தா தேவி என்பவர் சார்பில் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது. ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்து வழங்கியுள்ளார். விவேக் பெயரில் ஆக்சிஸ் வங்கியில் ரூ.1000000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Sasikala is serving a 4-year prison sentence in an embezzlement case. she paid the fine of Rs 10 crore and 10 lakh rupees imposed on her in a separate court in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X