பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த அரசே இப்படித்தாங்க.. சித்தார்த்தாவுக்கு என்னாச்சி பாருங்க.. கொந்தளிப்பது விஜய் மல்லையா

Google Oneindia Tamil News

Recommended Video

    Mallya on Siddhartha | அரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படித்தான்.. சித்தார்த்தா பற்றி மல்லையா-வீடியோ

    லண்டன்: கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ள நிலையில், தலைமறைவு தொழிலதிபரான விஜய் மல்லையா டிவிட்டரில் ஷாக் வெளிப்படுத்தியுள்ளார்.

    கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின், மருமகனும், கஃபே காஃபி டே என்ற பிரபல சங்கிலித் தொடர் ரெஸ்டாரண்ட் நிறுவனருமான சித்தார்த்தா நேற்று முதல் திடீரென மாயமான நிலையில், அவரது உடல் மங்களூர் அருகே உள்ள நேத்ராவதி அணையில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

    இந்த நிலையில், மல்லையா வெளியிட்டுள்ள தொடர் ட்வீட்டுகளை பாருங்கள்:

    பணமதிப்பிழப்பிற்கு பின் கடுமையாக கஷ்டப்பட்ட சித்தார்த்தா.. தொடர் இழப்பு.. அதிர்ச்சி தரும் பின்னணி! பணமதிப்பிழப்பிற்கு பின் கடுமையாக கஷ்டப்பட்ட சித்தார்த்தா.. தொடர் இழப்பு.. அதிர்ச்சி தரும் பின்னணி!

    என்னை என்ன பண்றாங்க பாருங்க

    நான் வி.ஜி.சித்தார்த்தருடன் மறைமுகமாக தொடர்புடையவன். சிறந்த மனிதம் மற்றும் சிறந்த தொழில்முனைவோராக இருந்தவர் அவர். அவரது கடிதத்தின் உள்ளடக்கத்தில் இருப்பதை அறிந்து, வேதனையடைந்தேன். அரசு ஏஜென்சிகள் மற்றும் வங்கிகள் யாரையும் விரக்தியடையச் செய்துவிடுவர். எனக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். முழு கடனை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பை அளித்தும் என்னை இடைவிடாமல் தொந்தரவு செய்கிறார்கள்.

    சொத்துக்கள்

    மேற்கத்திய நாடுகளில், அரசும், வங்கிகளும் கடனாளிகள், தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த உதவுகின்றன. என் விஷயத்தில், எனது சொத்துக்களை முடக்குவதில் குறியாக இருக்கிறார்களே தவிர, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் தடுக்கிறார்கள். இவ்வாறு விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

    என்ன சொல்கிறீர்கள்

    இதனிடையே, அவரது ட்வீட்டை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். மல்லையா ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள இந்த நெட்டிசன், "நீங்களும் மங்களூருக்கு வந்து நேத்ராவதி ஆற்றில் குதிப்பீர்களா? இதைத்தான் மறைமுகமாக சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்".

    அரசை குறை சொல்வதா

    பணத்தை சட்டவிரோதமாக சம்பாதிப்பது, வரி செலுத்துவதைத் தவிர்ப்பது, கடன்களைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்கும்போது வெளிநாடுகளுக்கு ஓடவும், பின்னர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக அரசாங்கத்தை குறை கூறவும் என்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Fugitive liquor baron Vijay Mallya on Wednesday drew similarities with the case of Café Coffee Day founder V G Siddhartha, who was found dead on Wednesday after he alleged harassment by an income tax officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X