Dharmasthala: பரபரக்கும் தர்மஸ்தலா.. அதிநவீன கருவிகளுடன் களத்தில் இறங்கிய போலீஸ்! கடைசியில் ட்விஸ்ட்.. என்னாச்சு?
பெங்களூர்: தர்மஸ்தலாவில் பல உடல்களைப் புதைத்ததாக முன்னாள் தூய்மைப் பணியாளர் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதன் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அங்கு விசாரணை நடத்தி வருகிறது. இதில் மிக முக்கிய பகுதியாகக் கருதப்படும் ஸ்பாட் 13ல் அதிநவீனச் சாதனங்களைக் கொண்டு சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள கோயிலில் பணியாற்றிய காலகட்டத்தில் தான் பல உடல்களைப் புதைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு வேலை செய்த முன்னாள் தூய்மைப் பணியாளர் புகார் அளித்திருந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

திடீர் சோதனை
அந்த நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த நபர் மொத்தம் 16 இடங்களைக் குறிப்பிட்டிருந்தார். அங்கு நேரில் சென்று சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள், பல இடங்களில் தொடர்ச்சியாகச் சோதனை செய்து வந்தனர். அதில் ஓரிரு இடங்களுக்குச் சில எலும்புக்கூடுகளும் கண்டறியப்பட்டது.
சிறப்பு அதிகாரிகளின் இந்தச் சோதனையில் ஸ்பாட் நம்பர் 13 மிக முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இதற்கிடையே அங்கு அதிகாரிகள் அதிநவீனக் கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தியுள்ளனர். ஜிபிஆர் எனப்படும் Ground Penetrating Radar மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். புலனாய்வுக் குழுவின் தலைவர் பிரணாப் மொஹந்தி தலைமையில் இந்த சோதனை நடந்துள்ளது.
ரேடார் இமேஜிங் மூலம் சோதனை
ரேடார் இமேஜிங் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ட்ரோன் மூலம் அந்தப் பகுதி முழுக்க அதிகாரிகள் ஸ்கேன் செய்துள்ளனர். நிலத்தடியில் உள்ள எந்தவொரு பொருளையும் கண்டறிய இந்த ரேடார் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதில் நிலத்திற்கு அடியில் என்ன மாதிரியான பொருட்கள் இருக்கிறது என்பதை ரேடார் கருவி மூலம் நேரடியாகக் கண்காணிக்கலாம். இந்த அதிநவீனக் கருவிகளைக் கொண்டே அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, புகார்தாரர் மற்றும் அவர்களது வழக்கறிஞர் முன்னிலையில் GPR ஸ்கேன் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஸ்கேன் வழக்கில் முக்கிய ஆதாரங்களை வெளிகொண்டு வருவதில் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஸ்பாட் 13 ஒரு முக்கிய இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ரேடார் இமேஜிங் முக்கிய ஆதாரங்களைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடரும் விசாரணை
இருப்பினும், நேற்றைய தினம் நடந்த ஜிபிஆர் சோதனையில் அங்கு நிலத்திற்கு அடியில் எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், அங்குக் குழி தோண்டியும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், இன்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்யும் பணிகள் தொடரும் எனத் தெரிகிறது. இதில் எதாவது தடயங்கள் கண்டறியப்பட்டால் அது வழக்கில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.
புதிய வழக்கு
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மஸ்தலாவில் 38 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியின் மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்யாடியைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தப் புகாரை அளித்திருந்தார். 1986ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, தனது சகோதரி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்தப் பெண் கோரிக்கை விடுத்திருந்தார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications