பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனடா குடிமகன் அக்ஷய் குமாரை இந்திய போர்க்கப்பலில் அனுமதித்தது ஏன்.. மோடிக்கு காங். சுளீர் கேள்வி

Google Oneindia Tamil News

பெங்களூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி லட்சத்தீவுகளில் தமது குடும்பத்தினருடன் விடுமுறை கொண்டாட்டத்தில் இருந்தார். அப்போது நாட்டின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விராத்தை குடும்பத்தினரின் உல்லாசத்துக்காக ராஜீவ் காந்தி பயன்படுத்தினார் என்பது பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு.

Divya Spandana tweets on Akshaykumar with INS Sumitra

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் பதிலடி கொடுத்து வருகிறது. கடற்படை முன்னாள் அதிகாரிகளும் இதனை மறுத்து வருகிறார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான திவ்யா ஸ்பந்தனா (குத்து ரம்யா) தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்வி கேட்டு டேக் செய்துள்ளார். அதில் 2016-ம் ஆண்டு விசாகப்பட்டிணத்தில் மிக பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

50 நாடுகளின் 99 போர்க்கப்பல்கள் பங்கேற்ற மிகப் பிரமாண்ட அந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி, பிரதமர், மாநிலங்களின் முதல்வர்கள் என விவிஐபிக்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். அந்நிகழ்ச்சி நடிகர் அக்‌ஷய்குமார், கங்கனா ராவத் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். நாட்டின் மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு நிகழ்வில் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற விழா மேடையில் பாலிவுட் நட்சத்திரங்கள் அழைக்கப்பட்டட்து அப்போது சர்ச்சையானது. ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க்கப்பலில் ராணுவ தளபதிகளுடன் அக்‌ஷயகுமார் செல்பி எடுக்க அனுமதித்தது யார்? என்றும் கேள்விகள் எழுந்தன.

இதனை தற்போது சுட்டிக்காட்டித்தான் அந்த ட்வீட்டைப் போட்டிருக்கிறார் திவ்யா ஸ்பந்தனா. அதுவும் தாம் கனடா குடியுரிமை வைத்திருக்கிறேன் என்று கூறிய அகஷ்யகுமாரை எப்படி கடற்படை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் திவ்யா.

English summary
Congress Former MP Divya Spandana had questions how Actor Akshaykumar on board with PM Modi in INS Sumitra on 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X