பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணீர் விட்ட டிகே சிவக்குமார்.. ஆடிப்போன காங். தலைகள்.. அமித் ஷா அனுப்பிய வலுவான மெசேஜ்!

காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் விட்ட டிகே சிவக்குமார்.. ஆடிப்போன காங்.தலைவர்கள் | Who is DK Shiva Kumar?

    பெங்களூர்: காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    கர்நாடக அரசியலில் அழுகை என்பது மிக சாதாரணமான விஷயம். ஆம், உதாரணமாக அங்கு தற்போதைய பாஜக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் மஜத முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உட்பட எல்லோரும் மக்கள் முன் கண்ணீர்விட்டு இருக்கிறார்கள்.

    சட்டசபையில் பலமுறை இவர்கள் வருத்தப்பட்டு கண்ணீர் சிந்திய சம்பவங்கள் நடந்து இருக்கிறது. ஆனால் ஒரே ஒருமுறை கூட மக்கள் முன்னிலையில் தன்னுடைய பலவீனத்தை காட்டாத நபர்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார்.

    எப்படி சிங்கமும்

    எப்படி சிங்கமும்

    சத்னூர் தொகுதியின் சிங்கம் என்றுதான் காங்கிரஸ் தொண்டர்கள் டிகே சிவக்குமாரை அழைத்து வந்தனர். அனைத்து ஜாதியினருக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும் டிகே சிவக்குமார், வோக்காலிகா ஜாதியினரை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் என்றுதான் கூற வேண்டும். இவர் சினிமா பட வில்லன் அளவிற்கு மிகவும் கெத்தாக கர்நாடகாவில் வலம் வந்தார்.

    கெத்து

    கெத்து

    ஹெலிகாப்டரில் அடிக்கடி பறந்து செல்வது. முன்னும், பின்னும் 10 ஆட்களை வைத்துக் கொள்வது. சொந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களையே மிரட்டி காரியங்களை சாதிப்பது என்று நிறைய விஷயங்களை இவர் வெளிப்படையாக செய்து வந்தார். அதிலும் பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக இவர் கடந்த ஒரு வருடமாக செய்தது எல்லாம் வேற லெவல் அதிரடிகள்.

    கமலா

    கமலா

    கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் ஆட்சியை உருவாகவும், அது ஒருவருடம் நீடித்து இருக்கவும் காரணமாக இருந்தவர் டிகே சிவக்குமார்தான். டிகே சிவக்குமாரை வீழ்த்த அமித் ஷாவிற்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. அதேபோல் 4 முறை ஆபரேஷன் கமலாவை முயற்சி செய்து, ஐந்தாவது முறைதான் அமித் ஷாவால் டிகே சிவக்குமாரை வீழ்த்த முடிந்தது.

    கண்ணீர்

    கண்ணீர்

    இப்படி கெத்தாக சுற்றிக்கொண்டு இருந்த டிகே சிவக்குமார் தொலைக்காட்சி முன் கண்ணீர் விட்டு அழுததுதான் தற்போது வைரலாகி உள்ளது. அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும் என்பதால் என்னால் என்னுடைய அப்பாவிற்கு விநாயகர் சதுர்த்தி அன்று மரியாதை செய்ய முடியவில்லை. இறந்த போன அவருக்கு என்னால் உரிய மரியாதையை செய்ய முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்று கண்ணீர்விட்டார்.

    இவரா

    இவரா

    அட, டிகே சிவக்குமாரா இப்படி கண்ணீர்விட்டு அழுவது என்று மக்கள் எல்லோரும் திகைத்து போனார்கள். ஆனால் அந்த கண்ணீரின் ஈரம் முழுதாக காயும் முன் 24 மணி நேரத்தில் நேற்று இரவே டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டார். ஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு, முறைகேடாக பணம் சேர்ந்தது உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தற்போது டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    என்ன சொல்வார்

    என்ன சொல்வார்

    உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்று அடிக்கடி டிகே சிவக்குமார் கூறுவார். தற்போது அவருக்கே அது நடந்து உள்ளது. இவரை எப்படி மத்திய அரசின் அமலாக்கத்துறை கைது செய்தது என்று தெரியாமல் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமையும் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

    போராட்டம்

    போராட்டம்

    அதேபோல் டிகே சிவக்குமார் தொண்டர்கள் கர்நாடகா முழுக்க இதனால் போராட்டத்தில் குதித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவில் அடையாளமாக இருந்தது, தற்போது இருப்பது இரண்டே இரண்டு பேர்தான் என்று கூட சொல்லலாம். அதில் ஒருவர் ப. சிதம்பரம், இன்னொருவர் டிகே சிவக்குமார். இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    யாரும் இல்லை

    யாரும் இல்லை

    இது காங்கிரஸ் கட்சிக்கு அமித் ஷா கொடுத்த ஸ்டிராங்க் மெசேஜ் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே எதிர்க்கட்சியில் வலுவான தலைவர்கள் யாரும் இல்லை. தற்போது இருக்கும் தலைவர்களையும் பாஜக முடக்கி வருகிறது. இனி யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை பாயலாம் என்று பாஜக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

    English summary
    Congress leader DK Shiva Kumar arrest is a strong message after P. Chidambaram's.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X