பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷாவை ஆட்டம் காண வைத்த தலைவர்.. கர்நாடக மாநில காங். தலைவரானார் டி.கே சிவக்குமார்.. அதிரடி!

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டிகே சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் தலைவராக டிகே சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Recommended Video

    கர்நாடக மாநில காங். தலைவரானார் டி.கே சிவக்குமார்

    கர்நாடக அரசியலில் மிகவும் வலிமையான நபர் என்று கருதப்படுபவர்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவக்குமார். முன்னாள் அமைச்சர், கட்சியின் பிக்பாஸ், வலுவான ஜாதி தலைவர் என்று டிகே சிவக்குமாருக்கு நிறைய அடையாளம் இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்த டி கே சிவக்குமார், கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்குள் வளர ஆரம்பித்தார். கர்நாடகாவின் முக்கிய தொகுதியில் ஒன்றான கனகபுரா தொகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார்.

    வந்தவர்கள் ஆயிரம்... சென்றவர்கள் ஆயிரம்... எதற்கும் கலங்காத காங்கிரஸ் வந்தவர்கள் ஆயிரம்... சென்றவர்கள் ஆயிரம்... எதற்கும் கலங்காத காங்கிரஸ்

    கட்சி எப்படி

    கட்சி எப்படி

    1985க்கு பின்தான் டி கே சிவக்குமார் அரசியல் விஸ்வரூபம் எடுத்தது. கடந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தது. அப்போது குமாரசாமி முதல்வராக இருந்தார். இந்த ஆட்சி அமைய காரணமே டிகே சிவக்குமார்தான். கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் எல்லோரையும் ஒன்றாக கட்டுக்குள் வைத்து இருந்தது இவர்தான். அப்போதே அமித் ஷாவிற்கும் இவருக்கும் நிறைய பிரச்சனைகள் இருந்தது.

    செம வைரல்

    செம வைரல்

    கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி உருவாக காரணமாக இருந்தது டிகே சிவக்குமார்தான். இரண்டு கட்சி எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் வைத்து ஆட்சியை அமைத்து, அமித் ஷாவை அதிர்ச்சி அடைய செய்தது டிகே சிவக்குமார்தான். அப்போது அமித் ஷாவிற்கு சிம்ம சொப்பனமாக மாறிய டிகே சிவக்குமார் இப்போதும் கடும் போட்டியாக பாஜகவிற்கு மாறியுள்ளார்.

    என்ன பயம்

    என்ன பயம்

    1989ல்தான் இவரை எல்லா அரசியல் தலைவர்களும் கவனிக்க தொடங்கினார்கள்.சதான்பூர் தொகுதியில் மஜத தேசிய தலைவர் தேவ கவுடாவை எதிர்த்து நின்று சிவக்குமார் வெற்றிபெற்றார். அப்போதுதான் இவரின் அரசியல் சூடுபிடித்தது. தேவ கவுடாவின் குடும்ப உறுப்பினர்களை தோல்வி அடைய செய்வதுதான் இவருக்கு ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க். தற்போது பாஜகவின் தீவிரமாக எதிராக சிவக்குமார் உருவெடுத்து இருக்கிறார் .

    அமித் ஷா எப்படி

    அமித் ஷா எப்படி

    அமித் ஷாவை தேசிய அளவில் தோல்வி அடைய செய்வதுதான் தற்போது இவரின் தீவிர நோக்கமாக இருக்கிறது. தற்போது கர்நாடக காங்கிரஸ் தலைவராக டிகே சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் மட்டுமில்லாமல் இந்தியாவில் இருக்கும் பணக்கார அரசியல்வாதிகளில் சிவகுமாரும் ஒருவர். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தன்னிடம் 840 கோடி ரூபாய் மொத்தமாக சொத்தாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பெரிய பணக்காரர்

    பெரிய பணக்காரர்

    எப்போதும் ஹெலிகாப்டரில் பயணிக்கும் இவர், செய்தியாளர்களை சந்திக்க கூட ஹெலிகாப்டரில் வந்த கதை எல்லாம் நடந்து இருக்கிறது. ஒக்கலிக சமூகத்தைமிகவும் வலிமையான மனிதர் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகி இருக்கிறார். கர்நாடக அரசியலில் எடியூரப்பாவின் பாஜக அரசு அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக கடுமையாக திணறி வருகிறது. இந்த நிலையில் சிவக்குமார் வருகை பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    சந்தோசம்

    சந்தோசம்

    இவருக்கு எதிராக கிரானைட் ஊழல் வழக்கு, நிறைய முறைகேடு வழக்கு இருக்கிறது. அனைத்தையும் மீறி முதல்முறை காங்கிரஸ் துணிவாக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது . வரிசையாக பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து வரும் காங்கிரஸ் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன் முதல்படியாக சிவக்குமார் நியமனம் பார்க்கப்படுகிறது.

    English summary
    The man of action: DK Shiva Kumar becomes the chief of Karnataka Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X